பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்.. எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா?

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் எத்தனை மணிக்கு ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர், கமல் ஹாசன் முயன்றும் முடியாமல் போக மணிரத்னம் படமாக இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வரவேற்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் 1

வரவேற்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் 1

ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உலகளவில் 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது.

பெரும் எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

பெரும் எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

முதல் பாகம் பெற்ற வரவேற்பை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமானது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தில் இடம்பெற்ற அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ளது. இதற்கான ரீ ரெக்கார்ட்டிங் லண்டனில் அப்பே ரோட் ஸ்டூடியோவில் சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்தது. படத்த்ன் ரன்னிஞ் டைம் 4 மணி நேரம் என கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பொன்னிய்ன் செல்வன் படத்தின் இரண்டாம் பாக இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்குகிறது. இதில் படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மேலும், கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தின் இசையையும், ட்ரெய்லரையும் வெளியிடவிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

ட்ரெய்லர் ரிலீஸாகும் டைம்

ட்ரெய்லர் ரிலீஸாகும் டைம்

இன்று மாலை தொடங்கும் பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பலர் ஸ்டேஜ்களில் நடனமாடியும், பாடல்கள் பாடியும் பெர்ஃபார்மன்ஸ் செய்யவிருக்கின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் பெர்ஃபார்மன்ஸும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் எத்தனை மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ட்ரெய்லரானது இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது.

ரஜினிக்கு அழைப்பு இல்லையா?

ரஜினிக்கு அழைப்பு இல்லையா?

முன்னதாக, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசனுடன் ரஜினிகாந்த்தும் கலந்துகொண்டார். ஆனால் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X