Ponniyin Selvan 2 Twitter Review: சோழர்கள் வென்றார்களா? பொன்னியின் செல்வன் 2 ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி 500 கோடி வசூல் சாதனை படைத்து மிரட்டியது.
இந்நிலையில், ஏப்ரல் 28ம் தேதியான இன்று பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்துக்கு நெட்டிசன்கள் கொடுத்துள்ள விமர்சனங்களையும் ரேட்டிங்குகளையும் இங்கே பார்ப்போம்..
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ப்ரீமியர் ஷோக்கள் வெளியான நிலையில், படத்துக்கான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
வெளியானது பொன்னியின் செல்வன் 2: ஏப்ரல் மாதம் முழுவதும் பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக அந்த படத்தில் நடித்த முன்னணி நடிகர்களான சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து பல இடங்களுக்கு ப்ரமோஷன் சென்று வந்தனர்.
இனிமேல் பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன் செய்ய முடியாது நண்பர்களை பார்க்க முடியாது என்றே ஃபீல் பண்ணி கடைசியாக கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் எமோஷனல் ஆனார்கள். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவும் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று வெளியானது.
செகண்ட் ஹாஃப் சூப்பர்: பொன்னியின் செல்வன் முதல் பாகம் எப்படி இருந்ததோ அதை விட சிறப்பாகவே இரண்டாம் பாகம் இருக்கிறது. குறையாகவும் எதுவும் இல்லை, பெரிய நிறையாகவும் இல்லை. எடுத்துக் கொண்ட கதைக்கு அனைவரும் நேர்மை செய்துள்ளனர். முதல் பாதி ஸ்லோவாக சென்றாலும் செகண்ட் ஹாஃப் சூப்பர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

மணிரத்னம் மிரட்டி விட்டுட்டாரு: இயக்குநர் மணிரத்னம் வேறலெவல் மேக்ஸ். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்புக்காகவே பொன்னியின் செல்வன் 2 படத்தை தாராளமாக பார்க்கலாம் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

முதல் பாகத்தை முந்தியது: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை முந்தியது. பொன்னியின் செல்வன் நாவலுக்கு எந்தளவுக்கு நீதி செய்ய முடியுமோ அதனை மணிரத்னம் செய்துள்ளார். கிளைமேக்ஸில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு.. ஆனால், நாவல் படித்தவர்களுக்கு அது சற்றே ஏமாற்றத்தைக் கொடுக்கலாம் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஹை பட்ஜெட் சீரியல்: பொன்னியின் செல்வன் திரைப்படம் ஹை பட்ஜெட் சீரியலாகவே தெரிகிறது. கன்னட டப்பிங் மிகவும் மோசம் என கன்னட ரசிகர் ஒருவர் படத்தை பார்த்த பின்னர் புலம்பித் தள்ளி இருக்கிறார்.

வேறமாறி வேட்டை: பார்ட் ஒன்னை விட பார்ட் 2 பயங்கரமா இருக்கும் என்றும் இப்படியெல்லாம் 2ம் பாகத்தை காட்ட முடியுமா?, ரொம்ப நல்லாருக்கு, கண்டிப்பா தியேட்டரில் அசந்து போவீங்க, மணி சார் வேறமாறி வேட்டை ஆடியிருக்காரு என படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











