Ponniyin Selvan 2: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இந்த தேதியில் ரிலீஸ் ஆகிறதா?

சென்னை: பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 500 கோடி வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், பிரம்மாண்டமாக அதன் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் மணிரத்னம், ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார்.

அதன் புகைப்படத்தை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 எப்போது ரிலீஸாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

500 கோடி வசூல்

500 கோடி வசூல்

செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் அக்டோபர் மாதம் முழுவதும் தங்கு தடையின்றி எந்தவொரு பெரிய போட்டியும் இல்லாமல் ஓடிய நிலையில், ஒரே மாதத்தில் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இமய சாதனை படைத்துள்ளது. சின்ன பழுவேட்டரையாக நடித்த பார்த்திபன் நேற்றைய விழாவில் படம் 500 கோடி வசூலை கடந்து விட்ட தகவலை தெரிவித்தார்.

சோழர்களின் வெற்றி விழா

சோழர்களின் வெற்றி விழா

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலே மிகப்பெரிய ஹிட்டான நாவல் தான் என்பதால், 50 வருடங்களுக்கும் மேலாக அந்த நாவலை படித்து வரும் தமிழ்ச் சமூகம் நிச்சயம் திரையில் அந்த கதை மாந்தர்களை காண ஆவலாக இருந்ததன் விளைவு தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று நேற்று சோழர்களின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 எப்போ

பொன்னியின் செல்வன் 2 எப்போ

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கிஷோர், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் 2 எப்போ வரும் என்கிற ஆவல் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த தேதியிலா

இந்த தேதியிலா

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கடைசி காட்சியிலேயே ஊமை ராணி கடலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பொன்னியின் செல்வனை மீட்க புறப்பட்டுச் செல்லும் போதே, 2ம் பாகம் அடுத்த ஆண்டு என இழுத்தடிக்காமல் இயக்குநர் மணிரத்னம் அறிவித்த நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மீண்டும் ப்ரோமோஷன்

மீண்டும் ப்ரோமோஷன்

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு செய்ததை விட 2ம் பாகத்திற்கு மேலும், அதிக ப்ரோமோஷனை செய்து இன்னும் பல நாடுகளுக்கு படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் லைகா இறங்க உள்ளதாகவும் வரும் பிப்ரவரி முதல் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X