Ponniyin Selvan 2: இந்த சீரியல் வில்லியின் மகளா குட்டிக் குந்தவை? அப்பாவும் டெரரான ஆள் ஆச்சே!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்தது யார் என்று கேட்டால்? அனைவரும் தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தான் என சட்டென சொல்லி விடுவார்கள்.

ஆனால், குட்டிக் குந்தவையாக நடித்தது யார் என்று கேட்டால், கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால், அவரும் பிரபல சீரியல் வில்லியின் மகள் என்கிற இந்த டாப் சீக்ரெட் தெரிந்தால் இனிமேல் அதுவும் கஷ்டம் இல்லை.

Ponniyin Selvan 2 Young age Kundavai actress is the famous star couples daughter

பொன்னியின் செல்வன் படத்தில் அழகு தேவதை குந்தவையாக த்ரிஷா நடித்த நிலையில், இளம் வயது குந்தவையாக நடித்தது பிரபல சீரியல் நடிகை கன்யா பாரதியின் மகள் நிலா தான்.

இளம் வயது நந்தினி: பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்ததிலேயே இயக்குநர் மணிரத்னம் மிகப்பெரிய வெற்றியை கண்டு விட்டார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயச்சித்ரா, ஜெயராம், அஸ்வின் காகமனு என பல பிரபல நடிகர்களை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் போட்டு பாதி வேலையை முடித்து விட்டார் மணிரத்னம்.

பெரிய நடிகர்கள் மட்டுமின்றி இளம் வயது நந்தினி, இளம் வயது குந்தவை என அதிலும், உரிய கவனத்தை செலுத்தி இருந்தார் மணிரத்னம். இளம் வயது நந்தினியாக சாரா அர்ஜுன் சரியான தேர்வாக இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குட்டிக் குந்தவை: அதே நேரம் நந்தினியையும் ஆதித்த கரிகாலனையும் பிரிக்கும் இளம் வயது குந்தவையாக நடித்த இளம் பெண்ணும் நடிப்பில் இப்படி அசத்துகிறாரே? யார் இவர் என தேடிய ரசிகர்களுக்கு செம ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக அந்த பெண்ணின் அப்பாவும் அம்மாவும் நடிகர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இளவரசி குந்தவையாக அழகு பொங்க நடித்த அந்த இளம் பெண்ணின் பெயர் நிலா என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் பிரபல சீரியல் நடிகை கன்யா பாரதி மகள் தான் அந்த இளம்பெண் என்பதை அறிந்ததும் ஷாக் ஆகி உள்ளனர்.

Ponniyin Selvan 2 Young age Kundavai actress is the famous star couples daughter

சீரியல் நடிகையின் மகள்: தெய்வம் தந்த வீடு சீரியலில் வில்லியாக நடித்து அப்படி மிரட்டி இருப்பாரே அதே கன்யா பாரதியின் மகள் தான் இந்த குட்டி நிலா. மலையாள சீரியல் நடிகையான கன்யா பாரதி தமிழில் அவளும் பெண்தானே சீரியல் மூலம் அறிமுகமானார். அஞ்சலி, லட்சுமி, கஸ்தூரி, செல்லமே, மீரா அவள், வள்ளி, தெய்வம் தந்த வீடு, அழகிய தமிழ் மகள் உள்ளிட்ட பல சீரியலில் நடித்துள்ளார்.

அப்பாவும் வில்லன் தான்: அம்மா கன்யா பாரதி மட்டுமின்றி அப்பா கவிதா பாரதியும் சீரியல், சினிமாக்களில் வில்லன் நடிகராக மிரட்டி வருகிறார். இந்த நட்சத்திர தம்பதியின் அழகான மகள் தான் குட்டிக் குந்தவையாக முதல் படத்திலேயே மணிரத்னம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார்.

Ponniyin Selvan 2 Young age Kundavai actress is the famous star couples daughter

அடுத்தடுத்து நிலாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பெற்றோர்களுடன் நிலா எடுத்துக் கொண்ட பல போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. நிலாவின் நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X