twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் படத்தை விரைவில் முந்தும் பொன்னியின் செல்வன்.. 7ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸான பொன்னியின் செல்வன் 7 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

    விரைவில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 400 கோடி வசூல் சாதனையை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு கமல் பேசியது இன்னொரு பக்கம் தீயாய் கொழுந்து விட்டு எரிகிறது.

    வெடித்த சர்ச்சை

    வெடித்த சர்ச்சை

    பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், ராஜ ராஜ சோழன் இந்து அரசன் இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு எதிராக பாஜக உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் குழுவுடன் படத்தை பார்த்த கமலிடம் கேள்வி எழுப்ப அவர் இந்து என்கிற மதமே ராஜ ராஜ சோழன் காலத்தில் இல்லை. அது, வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று அதிரடியாக பேச நாடு முழுவதும் அது பெரிய விவாத பொருளாகவே மாறி உள்ளது.

    ஸ்லோ டவுன்

    ஸ்லோ டவுன்

    ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகைகள் வரை பொன்னியின் செல்வன் வசூல் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த நிலையில், வேலை நாளான வியாழக்கிழமை பொன்னியின் செல்வன் வசூல் சற்றே குறையத் தொடங்கி உள்ளது. 40 சதவீத இருக்கைகளுடன் படம் பல தியேட்டர்களில் ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    300 கோடி இன்னும் அறிவிக்கல

    300 கோடி இன்னும் அறிவிக்கல

    பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக டிராக்கர்கள் எல்லாம் 2 நாள் முன்னதாகவே ட்வீட்களை போட ஆரம்பித்து விட்ட நிலையில், லைகா தயாரிப்பு நிறுவனம் இன்னமும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கடைசியாக 200 கோடி உலகளவில் வசூல் என்பதை மட்டுமே அறிவித்துள்ளது. இன்று அதிகாரப்பூர்வ அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரம் வசூலை முந்துமா

    விக்ரம் வசூலை முந்துமா

    மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பொன்னியின் செல்வன் படம் சூடு பிடிக்கும் என்பதால் இந்த வார இறுதிக்குள் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 400 கோடி ரூபாய் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் எந்தவொரு சினிமாவும் வசூல் செய்யாத 170 கோடி ரூபாய் வசூலை விக்ரம் செய்திருந்தது. இதுவரை பொன்னியின் செல்வன் 7 நாட்களில் தமிழ்நாட்டில் 124 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் விக்ரம் வசூலையும் முறியடிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    ஓடிடி உரிமம்

    ஓடிடி உரிமம்

    அமேசான் பிரைம் ஓடிடிக்கு பொன்னியின் செல்வன் படம் 125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சாட்டிலைட் உரிமத்தையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர் என்கின்றனர். லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படைத்த பெரிய வெற்றி காரணமாக அடுத்தடுத்து பெரிய படங்களையும், வரலாற்று சிறப்பு மிக்க படைப்புகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Chola rules everywhere at the Box Office. Mani Ratnam's Ponniyin Selvan 7th day Box office collection reports are here. It will soon cross over the Kamal Haasan's recent industry hit Vikram life time box office collection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X