பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்
புதுச்சேரி : மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் கடந்த வாரம் புதுச்சேரியில் துவங்கி நடந்து வருகிறது. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, அதே பெயரில் இந்த படம் எடுக்கப்படுகிறது.
இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், லால், ரகுமான், நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பான் இந்தியா படமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா என்ன ரோல்லப்பா நடிக்கிறார்
இந்த படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய், புதுச்சேரிக்கு குடும்பத்துடன் வந்து தங்கி உள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ரோல் பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது பற்றி படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

சரத்குமாருக்கு மனைவியா
அதில் ஒன்று தான் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது. அதில் ஒன்று நந்தினி கேரக்டர். சரத்குமாரின் மனைவி ரோலில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என கூறப்பட்டது.

யார் இந்த ராகவன் முருகன்
இந்த தகவல் உண்மை தான் என உறுதி செய்துள்ளார் நடிகர் மாஸ்டர் ராகவன் முருகன். இவர் வேறு யாருமல்ல. சேதுபதி, மாரி 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், றெக்க போன்ற படங்களில் நடித்த சிறுவன் தான்.

ரகசியத்தை சொல்லீட்டிங்களே தம்பி
இவற் தற்போது ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாக நினைத்து பொன்னியின் செல்வன் பற்றிய சில ரகசியங்களை கசிய விட்டுள்ளார்.

நீங்க என்னவா நடிக்கிறீங்க
அது என்னவென்றால் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி கேரக்டரில் தான் நடிக்கிறாராம். அதே போல் தான், சிறு வயது பாண்டிய மன்னராக நடிக்கிறார்களாம். ராகவன் பகிர்ந்த இந்த செல்ஃபிக்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.

பட ரிலீஸ் கன்ஃபாம்
லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே உறுதி செய்து விட்டது.


Click it and Unblock the Notifications











