தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.. நடிகர் பார்த்திபன் பங்கேற்பு.. ட்விட்டரில் வீடியோ போட்டு அசத்தல்!
Recommended Video
சென்னை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதை காண நடிகர் பார்த்திபன் சென்றுள்ளார்.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை நேரில் கண்டு உள்ளம் மகிழ்ந்துள்ள நடிகர் பார்த்திபன் அதனை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
மேலும், தஞ்சையில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளிலும் நடிகர் பார்த்திபன் கலந்து கொள்ள உள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் ஸ்டைலில்
செல்வராகவன் நடிப்பில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ ராஜாவாக நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். அந்த படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, "மக்காள் நாளை யாம் தஞ்சை வருகிறோம், குடமுழுக்கில் கலந்துக் கொள்கிறோம்" என பதிவிட்டு இருந்தார்.
எப்போ?
மேலும், மற்றொரு ட்வீட்டில் இன்று காலை 8.30 மணிக்குத் தான் கோவில் வாசல் வருவேன் என்ற டைமிங் அப்டேட்டையும் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை அலர்ட் செய்திருந்தார். மேலும், கோயிலுக்கு வந்ததில் இருந்து பல விஷயங்களை தனது மொபைல் மூலம் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.
தமிழில் குடமுழுக்கு
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அது தான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. தஞ்சை கோயிலுக்கு சென்றுள்ள நடிகர் பார்த்திபன் குடமுழுக்கு நடைபெறும் வீடியோவை வெளியிட்டு, தமிழில் குடமுழுக்கு நடக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திரையுலகிலிருந்து
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவில் இருந்து வேறு எந்த நடிகரும் செல்லவில்லை என்றும், திரையுலகிலிருந்து தான் மட்டுமே சென்றுள்ளதாகவும் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போட்டு கூறீயுள்ளார். தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டத்தை சுற்றி சுற்றி படம் பிடித்து தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறார்.
கிரீடம் மார்பிலும்
தஞ்சை கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்டு தஞ்சை பெருவுடையாரை தரிசித்து திரும்பிய நடிகர் பார்த்திபன், தனது காரில் இருந்த படி எடுத்த புகைப்படத்தை போட்டு, கிரீடம் மார்பிலும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது சட்டையில் கிரீடம் அச்சிடப்பட்டிருந்ததை காண்பித்து இவ்வாறு தனக்கே உரிய பாணியில் ட்வீட் போட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக பார்த்திபன் நடித்து வருகிறார். தஞ்சை கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனான அருள்மொழி வர்மனின் அடை மொழி பெயர் தான் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சோழர்கள் கதையில் பார்த்திபன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











