twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் படத்துக்கு எனக்கே இன்னும் டிக்கெட் கிடைக்கல.. தஞ்சாவூரில் தவிக்கும் பார்த்திபன்!

    |

    சென்னை: பிவிஆர் உள்ளிட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் மட்டுமின்றி சாதாரண திரையரங்குகளிலும் பொன்னியின் செல்வன் படத்துக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வரை ஹவுஸ்ஃபுல் புக்கிங் ஆகி வருகிறது.

    சென்னையில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கமான பலாஸோவில் ஆன்லைன் டிக்கெட்டை ஆஃப் செய்து விட்டு நேரடியாக வந்து வாங்க சொல்ல, அதற்கே பெரும் கூட்டம் நிற்கிறது.

    இயக்குநர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், பார்த்திபனுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என புலம்பி உள்ளார்.

    பொன்னியின் செல்வனை வீழ்த்த முடியாது.. விக்ரம் வேதா இயக்குநரே இப்படி சொல்லிட்டாரே! பொன்னியின் செல்வனை வீழ்த்த முடியாது.. விக்ரம் வேதா இயக்குநரே இப்படி சொல்லிட்டாரே!

    மெகா புரமோஷன்

    மெகா புரமோஷன்

    பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் மணிரத்னம், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலி பாலா, சரத்குமார், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த 2 வாரங்களாக சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி என பல நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்தனர்.

    சரத்குமார் பிரஸ்மீட்

    சரத்குமார் பிரஸ்மீட்

    இந்நிலையில், நேற்று பிரத்யேகமாக நடிகர் சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்துக்காக ஒரு பிரஸ்மீட்டையே நடத்தி இருந்தார். இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையராக அவர் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினியே சொல்லியும் மணிரத்னம் மறுத்திருந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் தனது கதாபாத்திரம் பற்றியும், விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருவது பற்றியும் பேசியிருந்தார்.

    லைவ் வரும் சின்ன பழுவேட்டரையர்

    லைவ் வரும் சின்ன பழுவேட்டரையர்

    பெரிய பழுவேட்டரையர் பிரஸ் மீட் வைத்த நிலையில், தஞ்சைக்கு சாமி தரிசனத்துடன் படம் பார்க்க புறப்பட்ட சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் இன்று மாலை 3 மணிக்கு ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் லைவ் வரப் போவதாக தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளார். வந்தியத்தேவனை திரையில் மிரட்டி விரட்டப் போகிறார் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் என்பது கூடுதல் தகவல்.

    எனக்கே டிக்கெட் கிடைக்கல

    எனக்கே டிக்கெட் கிடைக்கல

    "நற்பொழுதாகுக....
    நாளை திரையில் வருமுன்
    இன்று நேரலையில்(insta)
    3pm வருகிறேன்!
    பி.கு: பொ.செ-க்கு எனக்கே இன்னும் டிக்கட்டு(திக்கெட்டும் இஃதே) கிடைக்கல!! " என தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் கமெண்ட் போட்டுள்ளார்.

    ஸ்பெஷல் ஷோவுக்கு நோ

    ஸ்பெஷல் ஷோவுக்கு நோ

    இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடித்த முக்கிய நடிகர்களே சிலர் ஸ்பெஷல் ஷோ கேட்டதற்கு முடியவே முடியாது. அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், படத்தில் நடித்த பார்த்திபனுக்கே டிக்கெட் கிடைக்கலையாப்பா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்து

    ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்து

    சோழ மன்னனாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அசத்தலாக பார்த்திபன் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரிலேயே மிரட்டி உள்ள பார்த்திபன் நாளை தியேட்டரில் சின்ன பழுவேட்டரையராக ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரில் படத்தை ரசிகர்களுடன் பார்க்க சில தினங்களுக்கு முன்பே கிளம்பிவிட்டார் பார்த்திபன்.

    English summary
    Ponniyin Selvan actor Parthiban feels for not getting ticket for PS1 in his twitter handle and he will come to instagram live for all Ponniyin Selvan fans at today 3pm. Parthiban done a Chinna Pazhuvettaraiyar role in Ponniyin Selvan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X