பொன்னியின் செல்வன் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்.. தளபதி 67ல இவங்க தான் ஹீரோயினா?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

அதற்கான எழுத்து பணிகளுக்காக சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு பேனாவை கத்திப் போல தீட்டி திரைக்கதையை எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

ஏற்கனவே சமந்தா இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் பரவி வரும் நிலையில், பொன்னியின் செல்வன் நாயகியும் படத்தில் இணையப் போவதாக தகவல்கள் வலம் வருகின்றன.

வாரிசு படத்தை முந்தி

வாரிசு படத்தை முந்தி

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் அந்த படத்தை பேசுவதை விட்டு விட்டு அதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 67 படத்தை பற்றித் தான் வெறித்தனமாக பேசி வருகின்றனர். வம்சி படத்தின் மீது பெரிய நம்பிக்கை ரசிகர்கள் மத்தியிலேயே இல்லாத நிலையில், விக்ரம் வெற்றியால் லோகேஷ் கனகராஜ் மீது அனைவரது கவனமும் இயல்பாகவே திரும்பி இருக்கிறது.

எல்சியூ

எல்சியூ

தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் தான் என்பது அவரது பேட்டிகள் மூலமாகவே தெளிவாக தெரிந்து விட்டது. நடிகர் விஜய் வெறித்தனமான வில்லனாக இந்த படத்தில் வரப் போகிறாரா? அல்லது ராயப்பன் போல நல்ல கேங்ஸ்டரா என்பதை வெயிட் பண்ணி பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் நாயகி

பொன்னியின் செல்வன் நாயகி

ஏற்கனவே தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி உள்ள நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்றும், சமந்தா வில்லி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மீண்டும் விஜய் - த்ரிஷா ஜோடி அமைந்தால் செம சூப்பரா இருக்கும் என ரசிகர்கள் கில்லி வைப்ரேஷன் உடன் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Recommended Video

விமான நிலையத்தில் Mask-கோடு வந்த Trisha! ID-யை check பண்ணாத Officeres! *Kollywood
சமந்தாவுக்கு பதிலா

சமந்தாவுக்கு பதிலா

நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக இருக்க மாட்டார் என்றும், பாலிவுட்டில் சமந்தா பிசியாக இருப்பதால், அவருக்கு பதிலாக த்ரிஷாவை அணுக படக்குழு முடிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது கசிந்துள்ளது என்றும் கூறுகின்றனர். அதே சமயத்தில் இந்த படத்தில் விஜய் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், த்ரிஷா அதற்கு பொருத்தமாக இருப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X