அடடா பக்கா மெலடி.. வெளியானது பொன்னியின் செல்வன் அக நக க்ளிம்ப்ஸ்

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தின் மணிமகுடமாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். 50 வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலுக்கு இன்றுவரை ரசிகர்களாக இருக்கின்றனர். தலைமுறைகள் தாண்டி அந்தப் நாவலை பலரும் வாசித்து வருகின்றனர். நடைபெறும் புத்தக கண்காட்சிகளில் அதிகம் பேர் அந்தப் புத்தகத்தை விரும்பி வாங்குகின்றனர்.

கனவை நனவாக்கிய மணிரத்னம்

கனவை நனவாக்கிய மணிரத்னம்

எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் மணிரத்னம் இந்த முயற்சியை கையில் எடுத்தார். அவரது முயற்சிக்கு லைகா நிறுவனம் கைகொடுக்க இந்த கனவு முயற்சி சாத்தியமாகியது.

வரவேற்பைப் பெற்ற முதல் பாகம்

வரவேற்பைப் பெற்ற முதல் பாகம்

பான் இந்தியா படமாக இரண்டு பாகங்களாக தயாராகியது பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். பொன்னியின் செல்வனின் முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்

முதல் பாகம் பெரும்பாலானோரை திருப்திப்படுத்தியது. அதேசமயம் நாவல் வாசித்தவர்களில் சிலர் படம் மீது ஒரு சில குறைகளை கூறினர். இதனால் படத்தின் இரண்டாம் பாகம் அவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

வெளியானது அகநக க்ளிம்ப்ஸ்

வெளியானது அகநக க்ளிம்ப்ஸ்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக நக பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியொவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் த்ரிஷா, கார்த்தி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மானின் பக்கா மெலடியாக வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.முழு பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

 வெளியான வந்தியத் தேவன் குந்தவை வீடியோ

வெளியான வந்தியத் தேவன் குந்தவை வீடியோ

முன்னதாக, குந்தவையாக நடித்திருந்த த்ரிஷா எப்படி அந்தக் கதாபாத்திரமாக மாறினார் என்பது தொடர்பான வீடியோவும், வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி எப்படி அந்தக் கதாபாத்திரமாக மாறினார் என்பது தொடர்பான வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து இரண்டாம் பாகம் மெகா ஹிட்டாகும் என கூறியிருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X