செப்டம்பர் 18ல் ஒளிபரப்பாகும் பொன்னியின் செல்வன் மியூசிக் ரிலீஸ்.. ரஜினி -கமல் பேச்சை கேட்க ரெடியா?

சென்னை : தமிழில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் -இசை, பாடல்கள் என ஒவ்வொன்றும் மாஸாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் தமிழக சினிமா ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைக்காவியம். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இதன் சூட்டிங்கை 150 நாட்களில் மணிரத்னம் முடித்ததாக கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டமான ட்ரெயிலர் வெளியீடு

பிரம்மாண்டமான ட்ரெயிலர் வெளியீடு

சர்வதேச அளவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் என படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. முன்னதாக படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்கள் பிரம்மாண்டமான அளவில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்பட்டன.

சிறப்பான ஏஆர் ரஹ்மான் கச்சேரி

சிறப்பான ஏஆர் ரஹ்மான் கச்சேரி

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியும் சிறப்பாக நடத்தப்பட்டது.

நட்சத்திரங்கள் பங்கேற்பு

நட்சத்திரங்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ராய் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக மும்பையில் இருந்து வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்களின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

சிறப்பு விருந்தினர்கள் பேச்சு

சிறப்பு விருந்தினர்கள் பேச்சு

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோலிவுட்டின் ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் கமல் கலந்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் தோன்றி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். குறிப்பாக ரஜினியின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

டிவியில் ஒளிபரப்பு

டிவியில் ஒளிபரப்பு

இந்த நிகழ்ச்சியை பார்க்க தற்போது ரசிகர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சன் டிவியில் வரும் செப்டம்பர் 18ம் தேதி ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஒளிபரப்பின்மூலம் இந்த இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டை ரசிகர்கள் முழுமையாக கண்டு களிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X