பொன்னியின் செல்வனின் அடுத்த அதிரடி..டிரைலர் விழாவில் யார் யார் வராங்க தெரியுமா?

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாக சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் திரைப்படமான பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மொத்தம் 12 பாடல்கள்

மொத்தம் 12 பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்திலிருந்து மொத்தம் 12 பாடல்கள் உருவாகி உள்ளன. இதில் ஒரு பாடலை இயக்குனர் மணிரத்னமே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் படங்களுக்கு வைரமுத்து பாடல்களை எழுதுவார். ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.

பொன்னி நதி

பொன்னி நதி

மோஷன் போஸ்டர், கேரக்டர்கள் போஸ்டர், டீசர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக துவக்கி உள்ளது. இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக பொன்னி நதி, இரண்டாவது பாடலான சோழா சோழா வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

புது அப்டேட்

புது அப்டேட்

இந்த நிலையில், பொன்னியின் செல்வன்மு முதல் பாகம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 6-ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தினமும் ஒவ்வொரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது.

கலந்து கொள்ளவாய்ப்பு

கலந்து கொள்ளவாய்ப்பு

நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள விழாவில், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலினையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள படக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளதாகவும், அந்த வகையில், அவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X