அடடா... ஆடியோ லாஞ்சையே அசத்தலாய் நடத்தப்போகும் பொன்னியின் செல்வன்? கசிந்த தகவல்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த அசத்தல் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இப்படம் அதே பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இப்படத்தின் முதல் பாகம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம் பிரபு, அஷ்வின், சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டில் ஆடியோ லாஞ்ச்

வெளிநாட்டில் ஆடியோ லாஞ்ச்

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லாஞ்சை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி துபாய் அல்லது லண்டனில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லாஞ்சை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கிராஃபிக்ஸ் வேலை

கிராஃபிக்ஸ் வேலை

அதிக ஆடியன்ஸை கவரும் பொருட்டு இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பொன்னியின் செல்வன் படம் இயக்குநர் மணி ரத்னத்தின் கனவு திட்டமாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கதையில் ஏராளமான கிராஃபிக்ஸ் வேலைகள் பயன்படுத்தப்படுகிறது.

Recommended Video

சர்ச்சையான கதையின்னு ஒதுக்கிட்டாங்க |Theerpugal Virkapadum Audio Launch, MayilSamy, Dheeran
ரூ. 500 கோடி பட்ஜெட்

ரூ. 500 கோடி பட்ஜெட்

பொன்னியின் செல்வன் படம் 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்ஸ் மற்றும் லைகா புரடெக்ஷன் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X