twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 நாட்களில், பீஸ்ட், வலிமை வசூலை பின்னுக்குத் தள்ளிய பொன்னியின் செல்வன்.. நெக்ஸ்ட் விக்ரம் தான்!

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

    விக்ரம் படத்துக்கு நேர்ந்ததை போல இந்தி பெல்ட்டில் பொன்னியின் செல்வன் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஆனாலும், சர்வதேச அளவில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் படத்தை இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாற்றி வருகின்றனர்.

    விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்களின் வாழ்நாள் வசூலை 4 நாட்களுக்குள் பொன்னியின் செல்வன் முறியடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    வந்தியத்தேவன் பெண்கள் பின்னால் திரியும் காதலனா? மணிரத்னம் மீது போலீசில் புகார்!வந்தியத்தேவன் பெண்கள் பின்னால் திரியும் காதலனா? மணிரத்னம் மீது போலீசில் புகார்!

    வலிமை, பீஸ்ட் ஓரம்போ

    வலிமை, பீஸ்ட் ஓரம்போ

    இந்த ஆண்டு வெளியான நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படங்கள் மொத்தமாகவே 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 3 நாட்களிலேயே 200 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் 4வது நாளில் இரு படங்களின் வாழ்நாள் வசூலை முறியடித்து முன்னேறி உள்ளது.

    அடுத்து விக்ரம் தான்

    அடுத்து விக்ரம் தான்

    கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் செய்து இதுவரை இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக முதலிடத்தில் உள்ளது. விரைவில் அந்த படத்தை பொன்னியின் செல்வன் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அமரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராட்சஸ வெற்றி

    ராட்சஸ வெற்றி

    பொன்னியின் செல்வன் திரைப்படம் 4 நாட்களும் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறி மிகப்பெரிய ராட்சஸ வெற்றிப் பெற்றுள்ளது என லைகா நிறுவனம் ட்வீட் போட்டுள்ளது. சத்யம் தியேட்டரில் மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலரும் வருகை தந்து பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாடினார்கள்.

    4 நாள் வசூல்

    4 நாள் வசூல்

    பொன்னியின் செல்வன் திரைப்படம் 4 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 நாட்களில் 200 கோடி வசூலை படம் அள்ளியது தொடர்பாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், 4ம் நாள் வசூல் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆயுத பூஜை, விஜயதசமி

    ஆயுத பூஜை, விஜயதசமி

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை நாளாக உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் விக்ரம் படத்தின் 400 கோடி வசூலை முறியடித்து 500 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புகள் அதிகம் என டிராக்கர்கள் கணித்துள்ளனர்.

    காணாமல் போன சிம்பு, தனுஷ் படங்கள்

    காணாமல் போன சிம்பு, தனுஷ் படங்கள்

    பொன்னியின் செல்வன் அலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடைய முடியாமல் காணமல் போனது. பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியான நானே வருவேன் நெகட்டிவ் விமர்சனங்கள் உடன் ஒரே நாளிலேயே பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. .

    ரசிகர்கள் தான் காரணம்

    ரசிகர்கள் தான் காரணம்

    சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இல்லையென்றாலும், தமிழ் சினிமாவின் பெருமை என்பதால், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் இந்த படத்தை பெரிய ஹிட் ஆக்க வேண்டும் என விட்டுக் கொடுக்காமல் இருந்தது தான் இந்த படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என்கின்றனர். மேலும், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை திரையில் காணும் ஆவல் தான் உலகளவில் ரசிகர்களை அந்த படத்தை பார்க்க தூண்டியுள்ளது என்றும் பொன்னியின் செல்வன் கதை தெரியாதவர்களுக்கு இந்த படம் பெருமளவில் கனெக்ட் ஆகாததற்கு காரணமும் அதுதான் என்கின்றனர்.

    English summary
    Director Mani Ratnam's magnum opus movie Ponniyin Selvan beats Vijay's Beast, Ajith's Valimai life time collection in just 4 days next it will ready to beat Kamal Haasan's Vikram movie soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X