Don't Miss!
- News
கணிக்க முடியாது.. வேண்டாம்! போதும் போதும் என்று முடிவு எடுத்த எடப்பாடி.. புட்டு புட்டு வைத்த புள்ளி
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 2.O சாதனையை முறியடித்த PS 1… ரஜினியின் கோட்டையை தகர்த்த மணிரத்னம்!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வனுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வரும் பொன்னியின் செல்வன் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.
மணிரத்னம் என்ன கிழிச்சிருவாருன்னு பாக்க போனேன்... பார்த்திபன் பளிச் பேட்டி

மணிரத்னம் செய்த மேஜிக்
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், எம்ஜிஆர் முதல் கலம்ஹாசன் வரை பல ஜாம்பவான்களின் கனவுப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. மணிரத்னத்தின் விடாமுயற்சியாலும் லைகாவின் பிரம்மாண்டமான பட்ஜெட்டாலும் சாத்தியமாகியுள்ள இந்தப் படம், பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் கலக்கல்
தமிழ்த் திரையுலகின் பலவருட கனவுப் படமான பொன்னியின் செல்வனுக்கு உலகம் முழுவதும் தரமான ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் இதுவரை உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான 10 நாட்களில் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, இந்திய திரையுலகையே மிரள வைத்துள்ளது. மணிரத்னம் சொன்னபடி மாஸ் காட்டிவிட்டார் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் சாதனை
பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல், இசையில் ஏஆர் ரஹ்மான், ஒளிப்பதிவில் ரவிவர்மான் என டெக்னிக்கலாகவும் மிரட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை கடந்துவிட்ட பொன்னியின் செல்வன், மொத்தமாக 350 கோடி வரை வசூலித்துள்ளதாம். இப்போது அமெரிக்காவிலும் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

ரஜினியின் சாதனை தகர்ப்பு
அமெரிக்காவில் எப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும். 2019ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் 45 கோடி ரூபாய் வசூல் செய்து டாப்பில் இருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. படம் வெளியாகி பத்தே நாளில் 45 கோடி வசூலை கடந்து 50 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் தான் முதல் இடத்தில் உள்ளதாம்.