பிடிஎஸ் வீடியோவே பட்டையை கிளப்புதே...பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் ரிலீசிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்களை தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பொன்னி நதி என துவங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
வந்தியத் தேவன் ரோலில் நடித்துள்ள கார்த்தி மற்றும் படத்தின் இன்ட்ரோ சாங்காக இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடி பெருக்கை முன்னிட்டு வந்தியத் தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டமக் என வீடியோ வெளியிடப்பட்டது.

பொன்னி நதி பிடிஎஸ் வீடியோ
பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரொமோஷனுக்காக படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வரும் வீடியோக்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்து வருகிறது.இந்நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளான பொன்னி நதி பாடலின் பிடிஎஸ் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவங்க 2 பேர் என்னை மதிக்கல
இந்த வீடியோவில் கார்த்தி மற்றும் பிருந்தா மாஸ்டர் பேசுவதாகவும், இந்த பாடலை எப்படி படமாக்கினார்கள் என்பது பற்றியும் காட்டப்பட்டுள்ளது. கார்த்தி பேசுகையில், தஞ்சைக்கு புதிதாக வரும் வந்தியத்தேவன் இயற்கை அழகை ரசித்தபடி வருவது தான் இந்த பாடல். வந்தியத் தேவனுக்கு என்ன பிடிக்கும்...சாப்பாடு, பெண்கள், இயற்கை. இந்த படத்தில் என்னை மதிக்காத இரண்டு பேர் ஒன்று பூங்குழலி, மற்றொன்று அந்த குதிரை. ஜெயம் ரவி கூட என்னை அடிக்கடி கிண்டல் செய்வார். நீ என்னுடன் பேசுவதை விட அந்த குதிரையுடன் தான் அதிகம் பேசுகிறாய் என்பார்.

ஆட்டம் போட வைத்த பாடல்
பிருந்தா மாஸ்டர் பேசுகையில், இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் போட்டதுமே நான் ஆட துவங்கி விட்டேன். ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்கும். அது போல திருவிழாவிற்குள் பயணிப்பதாக, கார்த்தியின் பார்வையில் இருந்து இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. அந்த குதிரை மியூசிக் மொழி தெரியும் போல வலது பக்கம் என்றால் அங்கு போகிறது, இடது பக்கம் என்றால் அந்த பக்கம் திரும்புகிறது என்றார்.

ரசிகர்களுக்கு இதுதான் வேணுமா
இந்த வீடியோவை பார்த்துவிட்டு, வாழ்நாளிலேயே நான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரே படம் இது தான். லிரிக்கல் வீடியோ, மேக்கிங் வீடியோ என இரண்டிலும் இரு வேறு கலர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதில் எதை படத்தில் காட்ட போகிறார்கள். விக்ரம் வச்சு எப்போ ப்ரோமோ ரிலீஸ் பண்ண போறீங்க என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











