For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பொன்னியின் செல்வன் புது வெர்ஷனா?..மணிரத்னம் கூட இப்படி யோசிக்கல.. யார் பார்த்த வேலைடா இது?

  |

  சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலுவை வைத்து பொன்னி நிதி பாடலை பக்காவாக எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  அந்த வீடியோவை பார்க்கும் போது என்னடா பண்ணிவெச்சிருக்கீங்க என கேட்டாலும், உண்மையில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

  இந்த ரீமிக்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி டிரெண்டிங்கில் உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு இதைவிட வேற ப்ரோமோஷன் வேணுமா என்ன?

  ஐதராபாத் செல்லும் பொன்னியின் செல்வன் படக்குழு.. இன்னைக்கு பிரமோஷன் அங்க தான்! ஐதராபாத் செல்லும் பொன்னியின் செல்வன் படக்குழு.. இன்னைக்கு பிரமோஷன் அங்க தான்!

  பொன்னியின் செல்வன்

  பொன்னியின் செல்வன்

  பொன்னியின் செல்வன் மணிரத்னம் அவர்களால் இரண்டு முறை கைவிடப்பட்டு இன்று திரைப்படமாக உருவாகி உள்ளது. 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி ,ஹைதராபாத், கோட்டை நகரமான குவாலியரில் ஷூட்டிங் நடந்து முடிந்து. மேலும், படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

  முன்னணி நடிகர்கள்

  முன்னணி நடிகர்கள்

  அப்படத்தில் விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் ரமேஷ் என இன்னும் பல கதாபாத்திரங்கள் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சென்னை,கேரளா, மும்பை, பெங்களுர் என பல ஊர்களில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

  பாகுபலி மாதிரி இருக்குமா ?

  பாகுபலி மாதிரி இருக்குமா ?

  ப்ரோமோஷன் என்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது போல, பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கும் பாகுபலி மாதிரி இருக்குமா ? பத்மாவதி மாதிரி இருக்குமா ? இல்லை அதுக்கும் மேல இருக்குமா என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். போதாத குறைக்கு படத்திலிருந்து பாடல், டீசர், டிரைலர் என அனைத்தும் வெளியாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி உள்ளது.

  ரவி வர்மன் ஒளிப்பதிவு

  ரவி வர்மன் ஒளிப்பதிவு

  இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

  5 மொழிகளில்

  5 மொழிகளில்

  இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், பொன்னியின் செல்வன் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

  பக்கா எடிட்

  பக்கா எடிட்

  இந்நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலுவை வைத்து பொன்னிநிதி பாடலை பக்காவாக எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.ஒரு பிரபலமான பாடல் வெளியாகும்போது, அந்த பாடலுக்கு இதற்கு முன்பு வெளியான பிரபலமான திரைப்படங்களின் வீடியோவைப் யூடியூபர் மற்றும் நெட்டிசன்கள் கச்சிதமாக பொருத்தி எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடகங்களை கலக்குவார்கள்.

  வந்தியத்தேவனாக கைப்புள்ள

  வந்தியத்தேவனாக கைப்புள்ள

  அந்த வகையில், தற்போது பொன்னியின் செல்வன் படம் பற்றி தான் டாக் ஆப் தி வேல்டாக உள்ளது. இதனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் நம்ம வைகை புயல் வடிவேலுவின் படத்தின் பிரபலமான கதாபாத்திர பெயரை வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் குந்தவையா வடிவுகரசி, வந்தியத்தேவனாக கைப்புள்ள, ஆழ்வார்க்கடியனாக பாடி சோடா, பெரிய பழுவேட்டரையராக அலார்ட் ஆறுமுகம், அருள்மொழி வர்மனாக என்கவுண்டர் ஏகாம்பரம், சுந்தர சோழனாக பிச்சு மணி, சின்ன பழுவேட்டரையராக சுனா பானா என அட்டகாசமாக எடிட் செய்து கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

  எவன் பார்த்த வேலைடா இது?

  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் புது வெர்சனா? என்றும் மணிரத்னம் கூட இப்படி யோசிச்சி இருக்க மாட்டாரு, எவன் பார்த்த வேலைடா இது என்று கேட்டு வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவை பார்க்கும் போது கொய்யால என்னம்மா யோசிச்சி இருக்குறாங்க என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

  English summary
  ponniyin selvan character remix video trending on social media
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X