‘பொன்னியின் செல்வன்’ யார் யார் என்னென்ன கதாபாத்திரம்?..பார்த்திபன்.. சரத்குமாருக்கு என்ன ரோல்!

சென்னை : "பொன்னியின் செல்வன்" இந்த நாவலை யாருக்குத்தான் பிடிக்காது. அலை கடல் போல் விரிந்து பரந்திருக்கும் வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிபன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான் என நாவலை படிக்கத் தொடங்கும் போது வரும் வியப்பு.. எத்தனை முறை படித்தாலும் அதே விறுவிறுப்பு பக்கத்திற்கு பக்கம் சுவாரசியம் கூடிக்கொண்டே போகும். அமரர் கல்கியின் படைப்பில் தனித்துவமான ஓர் படைப்பு.

கல்கி இதழில் பொன்னியின் செல்வன் தொடராக வந்த போதும், அதுவே பின்னர் நூலாக வந்த போதும் பெரும் வாசகர்களை பெற்றது. எம்.ஜி.ஆர்,கமல் அவர்களின் கனவு இயக்குநர் மணிரத்தினத்தால் நிறைவேறியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளதால் படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று பார்க்கலாமா?

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார் இந்த கதாபாத்திர போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது இதையடுத்து, வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என அவர்களது புகைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

யார் யாருக்கு என்ன ரோல்

யார் யாருக்கு என்ன ரோல்

மேலும் பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் விவரம்

பூங்குழலி - ஐஸ்வர்யா லட்சுமி

வானதி - ஷோபிதா

சுந்தர சோழர் - பிரகாஷ்ராஜ்

கந்தன் மாறன் - விக்ரம் பிரபு

பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்

கடம்பூர் சம்புவரையர் - நிழல்கள் ரவி

 என்ன ரோல்

என்ன ரோல்

மலையமான் - லால்

அநிருத்த பிரம்மராயர் - பிரபு

சோமன் சாம்பவன் - ரியாஸ் கான்

ரவிதாசன் - கிஷோர்

சேந்தன் அமுதன் - அஸ்வின்

மதுராந்தகன் - அர்ஜுன் சிதம்பரம்

பார்த்திபேந்திர பல்லவன் - ரஹ்மான்

குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடித்துள்ளார்.

Recommended Video

Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
டீசர்

டீசர்

பொன்னியின் செல்வன் டீசரை இருதினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. கனவுலகை கண் முன் நிறுத்தும் பிரமாண்டமாய்.. வெளியாகி பார்ப்பவர்களை புல்லரிக்க செய்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' டீசரை விஎப்எக்ஸ் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிஜக் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. யூ டியூபில் ஐந்து மொழிகளில் வெளியான இந்த டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே மொத்தமாக ஒரு கோடி பார்வையைக் கடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X