கையில் வாளுடன் கெத்து காட்டும் விக்ரம்..பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸ் சண்டை இப்படித்தான் எடுத்தாங்களா?

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியின் ஒத்திகை வீடியோ வெளியாகி உள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள படத்தில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இந்த படத்தில், விக்ரம்,கார்த்தி,ஜெயம்ரவி,சரத்குமார், பார்த்திபன்,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத ஒரு பெருமை நடிகை ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. தமிழில் இதுவரையில் அதிக பொருட் செலவில் தயாரான இரண்டு பிரம்மாண்டமான படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். எந்திரன் படம் தமிழில் அதிக வசூலைக் குவித்த படமாகும். தற்போது ஐஸ்வர்யா ராய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படமும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

மகளுடன் படம் பார்த்தார்

மகளுடன் படம் பார்த்தார்

ஐஸ்வர்யா எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினிதேவி கதாபாத்திரம் அவருக்கு என்றும் மறக்க முடியாத படமாகவே இருக்கும். அதனால்தான் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க மும்பையிலிருந்து தனது மகளுடன் கிளம்பி வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

வசூலை வாரிக் குவிக்கிறது

வசூலை வாரிக் குவிக்கிறது

செப்டம்பர் 30ந் தேதி வெளியான படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர். இப்படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் ஆஸ்ட்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், மலேசியா, சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் படம் வெளியானது முதல் முதலிடத்தில் உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி

கிளைமாக்ஸ் காட்சி

கடந்த ஒரு வாரமாக சோஷியல் மீடியாவில் பொன்னியின் செல்வன் பீவர் அதிகாரித்து எங்கு பார்த்தாலும், அதன் பேச்சாகவே உள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் இருக்கையின் நுனியில் அமரவைத்த சண்டை காட்சியின் ஒத்திகை வீடியோ வெளியாகி உள்ளது. இதில் விக்ரம் கையில் வீரவாளை வைத்துக்கொண்டு பாய்மரப்படகில் ஏறி அங்கும் இங்கும் சண்டை போடுகிறார். படம் பார்க்காத ரசிகர்கள் இந்த சண்டை காட்சியை சிலிர்த்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X