பொன்னியின் செல்வன் பாகுபலி ஒப்பீடு... தெலுங்கு ரசிகர்களின் வன்மம் குறித்து கமல்

சென்னை: நேற்றைய முன்தினம் நடிகர் கமல்ஹாசன் நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்திவுடன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இது அந்தப் படத்தினுடைய ஒரு புரமோஷனாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் பல சுவாரசியமான விஷயங்களையும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்

பொற்காலம்

பொற்காலம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் நான் ஒரு சினிமா ரசிகன், தயாரிப்பாளர், விக்ரம் மற்றும் கார்த்தியை பார்த்து பொறாமைப்படும் ஒரு சக நடிகன் என்பதுதான்.இந்தப் படத்திற்கு நான் ஆரம்பத்தில் பொற்காலம் என்று ஒரு வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பேன். அது படத்திற்கு மட்டுமல்லாமல் தற்போதைய தமிழ் சினிமா துறைக்கும் பொருந்தும். தொடர்ச்சியாக தமிழ்ப் படங்கள் வெற்றி பெறுவது சினிமா துறைக்கு அமைந்துள்ள பொற்காலம் என்று கூறியிருக்கிறார்.

லைகா மணிரத்னம்

லைகா மணிரத்னம்

தமிழ் சினிமாவிற்கு நூறு வயது என்றால் எனக்கு சினிமா வாழ்க்கையில் 63 வயது. படத்தின் எண்ட் டைட்டில் கார்டில் இத்தனை நபர்கள் பணிபுரிந்துள்ளார்களா என்று பிரம்மிப்பாக பார்த்தேன். அதற்கு காரணம் லைக்கா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் மணிரத்னம்தான். நான் ஹீரோவாக மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது ஒரு படத்திற்கு 12 அல்லது 13 நபர்கள்தான் இருப்பார்கள். ஆனால் இப்போது இவ்வளவு பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ள லைக்காவை பாராட்டியிருக்கிறார்.

கமலின் பாராட்டு

கமலின் பாராட்டு

அதேபோல நடிகர்களை பற்றி பேசும்பொழுது கார்த்தியை பார்த்து, நீங்கள் நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் நான் நடிக்க வேண்டியது. அந்த படத்தின் ரைட்ஸை நான் வாங்கியிருந்த போது சிவாஜி ஐயா என்னை அருண் மொழி வர்மனாகவும் ரஜினியை வந்தியத்தேவனாகவும் நடிக்க வைக்கும்படி கூறியிருந்தார். அதே போல விக்ரமிற்கு காட்சிகள் குறைவாக இருந்தும் அதில் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்று இருவரையும் பாராட்டினார்.

விக்ரம் வசூல் முறியடிப்பு

விக்ரம் வசூல் முறியடிப்பு

விக்ரம் படத்தினுடைய சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்கிறார்களே என்ற கேள்விக்கு , மிகப் பெரிய சந்தோஷம். அதற்காகத்தான் இதில் கலந்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி மொழி அரசியலை சினிமா துறையில் கொண்டு வரக்கூடாது. தெலுங்கில் உருவான சங்கராபரணம் திரைப்படத்தை நாமும், முழுக்க முழுக்க தமிழ் கலைஞர்களால் எடுக்கப்பட்ட மரோசரித்ரா என்கிற தெலுங்கு படத்தை அவர்களும் பல காலம் திரையரங்குகளில் ஓட்டினார்கள். அது எப்போதும் தொடர வேண்டும் என்று கூறி இருக்கிறார்

வெற்றிமாறனின் கருத்து

வெற்றிமாறனின் கருத்து

ராஜராஜன் இந்து அல்ல என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ராஜராஜன் வாழ்ந்த காலத்தில் இந்து என்ற ஒரு வார்த்தையே கிடையாது. தூத்துக்குடியை டூட்டுகோரின் என்று எப்படி ஆங்கிலேயன் மாற்றினானோ அதேபோலத்தான் அவர்கள் வந்த போது அவர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட பெயர் இந்து. வெற்றிமாறன் கூறியதைத்தான் நானும் கூறுகிறேன் என்று கமல் ஹாசன் பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X