பொன்னியின் செல்வன் மூன்றாம் நாள் வசூல்..இத்தனை கோடியா? அண்ணாந்து பார்க்கும் திரையுலகம்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான மூன்றே நாளில் கோடி கோடியாக வசூலை அள்ளி குவித்து வருகிறது.
ஜெயம் ரவி,பார்த்திபன்,சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, விக்ரம் பிரபு, பிரபு என படம் முழுக்க ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்தினம், அதன் தன்மை மாறாமல் அழகான படைப்பாக கொடுத்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன்
5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்தினம் இரண்டு பாகமாக எடுத்துள்ளார்.பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல அதில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரமே 30க்கு மேல் இருக்கும். இப்படி படத்தை துணிந்து எடுத்த மணிரத்னம் அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது.

கார்த்திக்கு குவியும் பாராட்டு
லைகா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வந்தியத்தேவனாக வரும் கார்த்தியின் பயணத்தையொட்டி கதையின் ஓட்டம் உள்ளது. கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

நயவஞ்சகி நந்தினி
இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கதாபாத்திரத் தேர்வுதான். காதலனை கொன்றவரை பழிதீர்க்கும் திட்டத்துடன் அரண்மனைக்குள் புகும் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பலரை உச்சுகொட்ட வைத்துள்ளது. நயவஞ்சக தனத்தை நடிப்பில் அழகாக காட்டி உள்ளார்.

பல கோடி வசூல்
செப்டம்பர் 30ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களாகி உள்ள நிலையில், 230 கோடி தாண்டி உள்ளது. பிளாக்பஸ்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்படம் இன்று ரூ 250 கோடி வசூலை எட்டிவிடும். தொடர்ந்து தசரா விடுமுறை தினம் என்பதால் பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











