பொன்னியின் செல்வன் 500 கோடி இமாலய வசூல்.. யாராவது என் கையை கிள்ளுங்க என கெஞ்சும் ஆதித்த கரிகாலன்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட்டிலேயே நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் 500 கோடி வசூலை தாண்டியதாக கூறியிருந்த நிலையில், இன்று தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதனை ஷேர் செய்து சியான் விக்ரம் தற்போது போட்டுள்ள உற்சாக ட்வீட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மணிரத்னத்தின் கனவு படம்

மணிரத்னத்தின் கனவு படம்

ரோஜா, அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தளபதி, நாயகன், ராவணன், கடல், குரு, செக்கச் சிவந்த வானம் என பல படங்களை இயக்கிய மணிரத்னம் கனவு படமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக எடுக்க வேண்டும் என நினைத்து வந்த நிலையில், இந்த ஆண்டு அவரது கனவுத் திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாகி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது.

50 நாள்

50 நாள்

பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பின்னரும் தியேட்டரில் அந்த படத்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர். 50வது நாள் போஸ்டரை வெளியிட்டு வசூல் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

என்னை யாராவது கிள்ளுங்களேன்

என்னை யாராவது கிள்ளுங்களேன்

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த சியான் விக்ரம் வெகு நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை ருசித்த நிலையில், இது கனவா இருக்கக் கூடாதா என்றும் என்னை யாராவது கிள்ளுங்களேன் என ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி

இனிமே உங்களுக்கு எப்பவுமே வெற்றி தான் சியான் விக்ரம் அண்ணா, இது கனவு அல்ல நிஜம் தான். பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்காக ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கிறோம். ஆதித்த கரிகாலனாக திரையில் மிரட்டிட்டீங்க சார், அடுத்து தங்கலான் படத்திலும் தரமான செய்கை இருக்கும்னு நம்புறோம் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X