twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: தமிழ்நாட்டில் 100 கோடியை கடந்து சாதனை

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது.

    விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் நான்கே நாட்களில் முறியடித்துள்ளது.

    பொன்னியின் செல்வனை பாராட்டிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்து போன ஜெயம் ரவி.. என்ன சொன்னாரு தெரியுமா? பொன்னியின் செல்வனை பாராட்டிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்து போன ஜெயம் ரவி.. என்ன சொன்னாரு தெரியுமா?

    பாக்ஸ் ஆபிஸில் மாஸ்

    பாக்ஸ் ஆபிஸில் மாஸ்

    மணிரத்னத்தின் விடாத முயற்சியால் கோலிவுட்டின் பலவருட கனவான பொன்னியின் செல்வன் படம் தற்போது நனவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என 30க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன், முதல் 5 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    தமிழ்நாட்டில் 100 கோடி

    தமிழ்நாட்டில் 100 கோடி

    பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில், நான்கே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது, அதேபோல், ஆந்திராவில் 19 கோடியும், கர்நாடகாவில் 17 கோடியும், கேரளாவில் 18 கோடியும், வட இந்தியாவில் 18 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் வேகமாக 100 கோடி வசூலை கடந்த படங்களின் வரிசையில், பொன்னியின் செல்வன் டாப்பில் உள்ளது. கமலின் விக்ரம் திரைப்படம் 8வது நாளில் தான் 100 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுக்க வசூல் வேட்டை

    உலகம் முழுக்க வசூல் வேட்டை

    பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 3150 திரைகளில் ஸ்கீரினிங் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் 600 திரைகளிலும், கேரளாவில் 200 திரைகளிலும், ஆந்திரா, தெலங்கானாவில் 550 திரைகளிலும் திரையிடப்பட்டுள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் 800 திரைகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 270 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வார இறுதிக்குள் 500 கோடி வசூலை சாத்தியமாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நம்பர் 1

    கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நம்பர் 1

    இந்த வருடம் வெளியான விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்கள் வசூலில் எதிர்பார்த்த அளவு சாதனை படைக்கவில்லை. ஆனால், கமலின் விக்ரம் திரைப்படம் 600 கோடி வரை கலெக்‌ஷன் செய்து மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன், விக்ரம் சாதனையையும் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், அடுத்தாண்டு வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும், மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் படி பொன்னியின் செல்வன் தான் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் டாப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    Mani Ratnam’s magnum opus Ponniyin Selvan 1, a much-awaited period drama, has long been making fans eager for its release. This film will break Tamil cinema box office records and will emerge as the best-opening Tamil film of the year. Ponniyin Selvan 1 collected 260 Crores worldwide and 100 Crores in Tamil Nadu itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X