twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாட்டில் தரமான சம்பவம் செய்யும் பொன்னியின் செல்வன்... மற்ற மாநிலங்களில் என்னாச்சு?

    |

    சென்னை: தமிழில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' இன்று (செப் 30) திரையரங்குகளில் வெளியானது.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என தகவல் சொல்லப்படுகிறது.

    இணையத்தில் லீக்கானதா பொன்னியின் செல்வன்..படத்தை வைத்து ஆன்லைன் மோசடி!இணையத்தில் லீக்கானதா பொன்னியின் செல்வன்..படத்தை வைத்து ஆன்லைன் மோசடி!

    பொன்னியின் செல்வன் திருவிழா

    பொன்னியின் செல்வன் திருவிழா

    தமிழ்நாட்டில் இன்று அறிவிக்கப்படாத சினிமா திருவிழாவாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கொண்டாடப்படுகிறது. கோலிவுட்டின் பல வருட கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் ரிலீஸான பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு போன்றவற்றை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்

    ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்

    பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் புக்கிங் இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதனால், டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து ஏரியாவிலும் ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்லானது.

    மற்ற மாநிலங்களில் வேகம் குறைவு

    மற்ற மாநிலங்களில் வேகம் குறைவு

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. கடந்த பத்து நாட்களாக கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி நகரங்களில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்ஸ் நடைபெற்றது. அதற்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளில் கூட பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

    விமர்சனம் கை கொடுக்குமா?

    விமர்சனம் கை கொடுக்குமா?

    திரையரங்குகளில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு சினிமா விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்களிடம் இருந்தும் நேர்மறையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதனால், பொன்னியின் செல்வன் படத்துக்கான வரவேற்பு இன்னும் அதிகமாகும் என்றும், மற்ற மாநில ரசிகர்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் அடுத்த வாரமும் பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட்டுகள் சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பொன்னியின் செல்வனுக்கு வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், வசூலில் மாஸ் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    English summary
    Ponniyin Selvan film was released today in theatres. It has been reported that Ponniyin Selvan did not receive a big opening in other states except Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X