twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை, பீஸ்ட் வசூலை முதல் நாளில் முறியடிக்க முடியாத பொன்னியின் செல்வன்.. ஆனால், ட்விஸ்ட் இருக்கு!

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் வலிமை, பீஸ்ட் படங்களின் வசூலை முறியடிக்கவில்லை.

    தமிழர்களின் பெருமை என்கிற அடையாளத்துடன் சோழர்களின் வரலாற்றை கூறும் படமாக பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது.

    அமரர் கல்கியின் நாவலை படமாக்க 70 ஆண்டுகளில் பலரும் முயற்சித்து முடியாத நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார்.

    பொன்னியின் செல்வன் வெற்றி.. ஒத்தை ஆளாக கெத்து காட்டி சாதித்த மணிரத்னம்..சமூக வலைதளங்களில் பாராட்டு பொன்னியின் செல்வன் வெற்றி.. ஒத்தை ஆளாக கெத்து காட்டி சாதித்த மணிரத்னம்..சமூக வலைதளங்களில் பாராட்டு

    ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல்

    ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல்

    பொன்னியின் செல்வன் படம் நல்லா இருக்கோ, நல்லா இல்லையோ என்றெல்லாம் நினைக்காமல் தமிழர்களின் பெருமை இந்த படம் இதை கொண்டாடியே ஆக வேண்டும் என ரசிகர்கள் புக்கிங் தொடங்கியதும் கிட்டத்தட்ட ஏகப்பட்ட தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட் போடும் அளவுக்கு டிக்கெட்டுகளை புக் செய்து விட்டனர்.

    பாசிட்டிவ் விமர்சனம்

    பாசிட்டிவ் விமர்சனம்


    இயக்குநர் ராஜமெளலி படத்தை போல பிரம்மாண்ட மிரட்டல் காட்சிகள் இல்லை என்றாலும், பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் எந்தவொரு சமரசமும் இல்லாமல் சிறப்பாகவே திரைப்படமாக கொடுத்துள்ளார் என படத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 26.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் உலகம் முழுவதும் 50 முதல் 60 கோடி வரை பொன்னியின் செல்வன் வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வலிமை, பீஸ்ட்டை முந்தவில்லை

    வலிமை, பீஸ்ட்டை முந்தவில்லை

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் அதிகபட்சமாக 36.17 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் ஈட்டியதாகவும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 31.4 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், வலிமை, பீஸ்ட் படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் முந்தவில்லை.

    விக்ரம், ஆர்ஆர்ஆர் விட அதிகம்

    விக்ரம், ஆர்ஆர்ஆர் விட அதிகம்

    ஆனால், அதே சமயத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படங்களின் வசூலை தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் முந்தியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரமும் டிக்கெட்டுகள் ஹவுஸ்ஃபுல்லாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாப் நடிகர்கள் இல்லை

    டாப் நடிகர்கள் இல்லை

    பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் எதிர்பார்த்ததை போலவே விஜய் மற்றும் மகேஷ் பாபு நடித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கும். சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸ் இல்லாத நிலையில், இப்படியொரு வசூல் வந்திருப்பதே பெரிய விஷயம் என ஒட்டுமொத்த திரைத்துறையினரே வியந்து பார்த்து வருகின்றனர்.

    ட்விஸ்ட் இருக்கு

    ட்விஸ்ட் இருக்கு

    அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படங்களுக்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களால் அடுத்த அடுத்த நாட்களில் அந்த படங்களின் வசூல் பெருமளவில் பின்னடைவை சந்தித்தன. ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்பட்ம் முதல் நாளில் எந்த அளவுக்கு வசூல் வந்துள்ளதோ அதே அளவுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட்டை பொன்னியின் செல்வன் முதல் பாகம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Ponniyin Selvan didn't beat Valimai and Beast first day box office at its home ground. But due to positive reports Ponniyin Selvan will definitely beat the life time collection of both the movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X