பொன்னியின் செல்வன் டீம் கொடுத்த அடுத்த அப்டேட்: தேவராளன் ஆட்டத்துக்கு ரெடியா இருங்க மக்களே!

சென்னை: பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் பாடல்களில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்றது 'தேவராளன் ஆட்டம்' பாடல்.

அசரடித்த மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான் காம்போ

அசரடித்த மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான் காம்போ

1992ல் வெளியான ரோஜா திரைப்படத்தில் இருந்து தொடங்கியது மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி. இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான எந்தப் பாடலும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் வெரைட்டியாக பாடல்களைக் கொடுத்து மாஸ் காட்டியுள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், வரும் 30ம் தேதி வெளியாகிறது. இதனால், படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஆக்ரோஷமான இசையில் தேவராளன் ஆட்டம்

ஆக்ரோஷமான இசையில் தேவராளன் ஆட்டம்

முதலில் வெளியான பொன்னி நதி, அடுத்து வெளியான சோழா சோழா பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் முழு ஆடியோவும் கடந்த 6ம் தேதி வெளியானது. அதில், இடம்பெற்ற 'தேவராளன் ஆட்டம்' என்ற பாடலை ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை கேட்காத ஒரு பாட்டு இதுவென ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

எதிர்பார்ப்பில் ரஹ்மான் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரஹ்மான் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் இசைக்காக இந்தோனேஷியாவின் பாலி தீவில் சென்று பல குறிப்புகளோடு திரும்பி வந்தார் ஏஆர் ரஹ்மான். அதற்கான நியாயத்தை தேவராளன் பாடலில் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். கடம்பூர் இரவில் நண்பர் கந்தமாறனுடன் குரவை கூத்துப் பார்க்கச் செல்லும் வந்தியத்தேவனுக்கு கிடைக்கும் அனுபவம் இந்தப் பாடலில் ரசிகர்களுக்கும் கிடைக்கிறது. இளங்கோ கிருஷ்ணனின் வரிகள் பெரிய பலமாக அமைந்துள்ளது.

லிரிக்கல் வீடியோவில் என்ன மேஜிக் இருக்கும்

லிரிக்கல் வீடியோவில் என்ன மேஜிக் இருக்கும்

பொன்னியின் செல்வன் படத்தில் 'தேவராளன் ஆட்டம்' மிக முக்கியமான பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் ஆல்பம் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாடல், நாளை லிரிக்கல் வீடியோவாக வெளியாகி இன்னும் அதகளம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் - ரஹ்மான் காம்போவில் 'தேவராளன் ஆட்டம்' பாடல் திரையரங்குகளில் இன்னும் புதிய அனுபவத்தை கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X