பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: ரஹ்மான், சிவமணி ரெக்கார்டிங் க்ளிம்ப்ஸுடன் அசத்தல் அப்டேட்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கோலிவுட்டின் கனவு திரைப்படம்
அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் தமிழ் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் முதல் பலரும் தீவிர முயற்சிகள் எடுத்தனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசைகளில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும் ஒன்று என அனைவரும் அறிந்ததே.

இரண்டாவது முயற்சி
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் விரைவில் முழுமையடைய உள்ளது. ஷூட்டிங்கை முடித்துவிட்ட படக்குழு, இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். முன்னதாக இந்தப் படத்தை மணிரத்னம் பல ஆண்டுகளுக்கு முன்னரே விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிப்பில் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கை கூடாமல் போன கனவுத் திட்டம், இப்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் நனவாகிவிட்டது.

மிரட்டிய டீசர்
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் படு மிரட்டலாக உருவாகியிருந்த இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. 'பொன்னியின் செல்வன்' படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் 'பொன்னியின் செல்வன்' ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் குறித்து செம்ம மாஸான அப்டேட் வெளியாகி வைரலாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானும் டிரம்ஸ் சிவமணியும் ரெக்கார்டிங் தியேட்டரில் அதிரடியான இசைக் கோர்ப்பு பணியில் இருக்கும் க்ளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனைப் பார்த்த ரசிகர்கள் படத்தைப் போலவே ரஹ்மானின் இசையும் வேற லெவலில் இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ள 'பொன்னியின் செல்வன்' டீம், எந்த தேதியில் என அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











