காலத்தைக் கடந்த காவியம்.. பொன்னியின் செல்வன்.. பிரமிக்க வைக்கும் நட்சத்திரக் குவியல்.. ஒரு பார்வை!
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் படம்.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன் என பல ஜாம்பவான்கள் படமாக உருவாக்க நினைத்து முடியாமல் போனது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் நாவலை மிக பிரம்மாண்டமாக மணிரத்னம் தற்போது இயக்கி வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் நாவலில் வீரம் மிக்க பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதால், நட்சத்திர நடிகர்களின் தேர்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில், யார் யார் என்ன என்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்ற முழு விவரம் இதோ உங்களுக்காக..
ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் கதையின் நாயகன் ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி.
சியான் விக்ரம்

பொன்னியின் செல்வன் அண்ணன் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம்.
கார்த்தி

வாணர குல வீரன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி.
ஐஸ்வர்யா ராய்

பழுவூர் ராணி நந்தினி மற்றும் ஊமச்சி மந்தாகினி தேவி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்.
த்ரிஷா

பொன்னியின் செல்வன் சகோதரி குந்தவையாக த்ரிஷா.
சரத்குமார்

பொன்னியின் செல்வன் தந்தை சுந்தர சோழனாக சரத்குமார்.
பார்த்திபன்

பெரிய பழுவேட்டரையராக பார்த்திபன்.
ரஹ்மான்

சின்ன பழுவேட்டரையர் காலந்தகக்கண்டராக ரஹ்மான்.
ஜெயராம்

அனிருத்த பிரம்மராயரின் தலைமை ஒற்றன் ஆழ்வார்க்கடியானாக ஜெயராம்.
பிரபு

முதல் மந்திரி அனிருத்த பிரம்மராயராக நடிகர் திலகம் பிரபு.
ஐஸ்வர்யா லட்சுமி

படகோட்டி பெண் பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி.
விக்ரம் பிரபு

வந்தியத்தேவனின் நண்பன் சேந்தன் அமுதனாக விக்ரம் பிரபு.
அஸ்வின்

கடம்பூர் இளவரசன் கந்தமாறனாக அஸ்வின்.
கிஷோர்

சோழ சாம்ராஜ்யத்தை அழிக்கத் துடிக்கும் தேவராளனாக கிஷோர்.
லால்

முக்கிய வில்லனான ரவிதாசனாக மலையாள நடிகர் லால்.


Click it and Unblock the Notifications











