twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்..முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது

    இதில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் நாவலை படித்த பாகுபலி இயக்குநர்..கதை, கேரக்டர்கள் குறித்து பாராட்டு! பொன்னியின் செல்வன் நாவலை படித்த பாகுபலி இயக்குநர்..கதை, கேரக்டர்கள் குறித்து பாராட்டு!

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    மணிரத்னத்தின் வரலாற்று சரித்திரம் பொன்னியின் செல்வன். இப்படம் திரையரங்குகளில் நேற்று கோலாகலமாக வெளியானது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்த பல புத்தக பிரியர்கள் படத்தை பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு ஆர்வத்துடன் டிக்கெட்டை வாங்கி குவித்தனர். இதனால், பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்தது.

    மேளதாளத்துடன்

    மேளதாளத்துடன்

    நேற்று காலை 4.30 மணிக்கு பொன்னியின் செல்வன் திரையிடப்பட்ட நிலையில் மேளதாளத்துடன் பேனர்களை கையில் ஏந்தியபடி ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்த்தனர். படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி மக்களோடு திரையரங்கில் படத்தை பார்த்தார். படம் பார்த்த அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    அமோகமான டிக்கெட் விற்பனை

    அமோகமான டிக்கெட் விற்பனை

    பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு மட்டும் ₹17 கோடியாக இருந்தது. வெளிநாட்டு முன்பதிவு ₹10 கோடியாகும். இது கமல்ஹாசன் விக்ரம் திரைப்பத்தின் ₹15 கோடி வசூலை தாண்டி உள்ளது. இந்த ஆண்டு அனைத்து தமிழ் படங்களின் முன்பதிவுகளை காட்டிலும் இதுவே அதிகபட்சமானதாகும்.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    இப்படம் தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 550 மற்றும் திரைகளிலும் திரையிடப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ 23 கோடி முதல் ரூ 25 கோடி என்றும், இந்தியா முழுவதும் ரூ 25 முதல் ரூ 30 கோடி என்றும், உலகம் முழுவதும் ரூ 35 கோடி முதல் ரூ 40 கோடி வரை வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அதிகரிக்கும்

    மேலும் அதிகரிக்கும்

    கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் ஜூன் மாதம் வெளியான நிலையில் இந்தியாவில் ₹33 கோடியும், உலகம் முழுவதும் ₹54 கோடியும் வசூலித்தது. பொன்னியின் செல்வன் இந்த எண்ணிக்கையை எளிதில் கடந்துள்ளது. இன்னும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Mani Ratnam’s historical epic Ponniyin Selvan: I released in theatres on Friday. Ponniyin Selvan I box office Collection
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X