மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்

Recommended Video

Ponniyin Selvan Movie: மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி- வீடியோ

சென்னை: மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வட மாநிலமான மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் படமாக்கப்படும் சில திரைப்படங்களில் நிச்சயம் மணிரத்னத்தின் படம் இருக்கும். அந்த வகையில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், மற்றும் மணிரத்னத்தின் அலைபாயுதே ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு, வட மாநிலமான மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படும் மூன்றாவது திரைப்படம் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் மணிரத்தினம், முதல் முறையாக ஒரு தமிழ் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படைப்பை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்க ஆயத்தமாகிவிட்டார்.

 Ponniyin Selvan is being filmed in Madhya Pradesh

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கவுள்ளார். இப்படம் மூலம் மறுபடியும் கோலிவுட்டிற்குள் நுழைகிறார் நம் அழகு தேவதை ஐஸ்வர்யா ராய் பச்சன். மேலும் அதோடு நாம் அறிந்த மற்றொரு செய்தி பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது.

இப்படத்தை பற்றிய புதியதோர் செய்தி ஒன்று கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொதுவாக தென்னிந்திய திரைப்படங்கள் வட மாநிலங்களில் படமாக்கப்படாது. அப்படியே இருந்தாலும், ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு, பின்னர் செட்போட்டு படமாக்கிவிடுவதுண்டு.

ஆனால் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வட மாநிலமான மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் படமாக்கப்படும் சில திரைப்படங்களில் நிச்சயம் மணிரத்னத்தின் படம் இருக்கும்.

 Ponniyin Selvan is being filmed in Madhya Pradesh

அந்த வகையில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், மற்றும் மணிரத்னத்தின் அலைபாயுதே ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு, வட மாநிலமான மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படும் மூன்றாவது திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி மற்றும் மகாநதி படத்திற்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு தனிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் வரலாற்று கதைப் பிரியர்களுக்கு மிகப் பிடித்தமான இது ஒரு வரலாற்று கதை என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்க தானே செய்யும். மேலும் பொன்னியின் செல்வன் பற்றின பல தகவல்களுக்காக காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X