Ponniyin Selvan: மிக மோசமான தோல்விப் படம் பொன்னியின் செல்வன்... இவரு சும்மாவே இருக்க மாட்டாரா..?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது.
முதல் பாகம் 2022 செப்டம்பரிலும், இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும் ரிலீஸானது.
பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தையே சந்தித்தது.
இந்நிலையில், 2023ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் தான் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 மோசமான தோல்விப் படம்: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க கோலிவுட்டில் மிகப் பெரிய போட்டியே நடைபெற்றது. எம்ஜிஆர், கமல்ஹாசன் என தொடர்ந்த இந்த ரேஸில் இறுதியாக இயக்குநர் மணிரத்னம் வெற்றிப் பெற்றார். லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவானது.
சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் பொன்னியின் செல்வனில் நடித்திருந்தனர். மணிரத்னத்தின் ஃபேவரைட்டான ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகம், 2022 செப்டம்பரில் வெளியானது. ராஜராஜசோழனின் வரலாறு, தமிழர்களின் பாரம்பரியம் என பலவிதமாக பொன்னியின் செல்வன் ப்ரொமோட் செய்யப்பட்டது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் 700 கோடி வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகமும் பல கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 500 கோடி ரூபாய் கூட வசூலிக்காமல் துவண்டுவிட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு இருந்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் இரண்டாம் பாகத்தில் சுத்தமாக எடுபடாமல் போனது. மணிரத்னம், லைகா நிறுவனம் உட்பட மொத்த படக்குழுவினரும் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இதுவரை 2023ம் ஆண்டு வெளியான படங்களில் எது மிக மோசமான தோல்வியைத் தழுவியது என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார். அதில் பொன்னியின் செல்வன் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தும் மிக மோசமான தோல்வியடைந்தது, பாக்ஸ் ஆபிஸிலும் குறைந்த அளவில் தான் வசூலித்ததாகக் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தப் படம் வெளியான போதும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அட்டக்கத்தி தினேஷ் நடித்த 'பல்லு படாம பாத்துக்க' படம் மிக மோசமான டைட்டிலுடன் வெளியானது எனவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். மேலும், காமெடி படங்களின் பட்டியலில் ருத்ரன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம், கொலை போன்ற சீரியஸ்ஸான ஆக்ஷன் ஜானர் படங்களையும் சேர்த்து பங்கம் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











