Ponniyin Selvan Jayam Ravi - யப்பா வேற லெவலுல இருக்காரே.. மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி
சென்னை: Ponniyin Selvan Jayam Ravi (பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி) பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான புரோமோஷன் பணிகள் தொடங்கியிருக்கும் சூழலில் ஜெயம் ரவியின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அந்த கெட் அப்புக்கு பலத்த வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

மணிரத்னத்தின் தொடக்கம்: பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதற்கான முயற்சியில் எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெறும் என ரசிகர்களும், படக்குழுவினரும் நம்பிக்கையில் இருக்கின்ற்னார்.. இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.

பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன்: படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் பொன்னியின் செல்வன் Anthem வெளியிடும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. சமீபத்தில் சென்னையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தங்களது பதிலை அளித்தனர்.
ஜெயம் ரவியின் அசத்தல் லுக்: படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு வெளியில் வரும்போதெல்லாம் அதில் பெரும்பான்மை கவனத்தை ஈர்ப்பது ஜெயம் ரவியாக இருக்கிறார். அவரது சால்ட் அண்ட் பெப்பர் லுக், அவர் போட்டிருக்கும் காஸ்ட்யூம் என அனைத்துமே மிக ஸ்டைலிஷாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கருப்பு நிறு குர்தா அணிந்திருந்தார்.
அந்த உடையும், கெட் அப்பும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற, பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் பாடலுடன் தான் சென்னையில் புரோமோஷனில் கலந்துகொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி. அது இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











