இந்தியில் அமிதாப்.. மலையாளத்தில் மோகன்லால்.. அப்போ தமிழில் ரஜினியா? பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பு

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக போகிறது.

Recommended Video

Ponniyin Selvan, உலகமே வியந்து பார்க்கும் அருள் மொழி வர்மன்

பொன்னியின் செல்வன் இந்தி டீசரை பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் வெளியிடப் போகிறார் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், மலையாள டீசரை மோகன்லால் வெளியிட போகிறார் என லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

வருகிறான் சோழன்

வருகிறான் சோழன்

பொன்னியின் செல்வன் திரைப்படம் திட்டமிட்டப்படி வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக போகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். நாளை சென்னையில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நடைபெற போகிறது.

இந்தியில் அமிதாப் பச்சன்

இந்தியில் அமிதாப் பச்சன்

பொன்னியின் செல்வன் இந்தி டீசரை பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட போகிறார் என சற்று முன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. நாளை சென்னையில் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் டீசர் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்க உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மோகன்லால்

இந்நிலையில், அடுத்த அறிவிப்பாக பொன்னியின் செல்வன் மலையாள டீசரை நடிகர் மோகன்லால் வெளியிட போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் மோகன்லால் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், அந்த பழைய நட்பின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் மலையாள டீசரை மோகன்லால் வெளியிட உள்ளார்.

தமிழில் ரஜினியா

தமிழில் ரஜினியா

ஒவ்வொரு சினிமா துறையில் இருந்தும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட படக்குழு பிளான் செய்துள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் நடித்துள்ள ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை வெளியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமலுக்கும் வாய்ப்பு

கமலுக்கும் வாய்ப்பு

ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லைகாவின் இந்தியன் 2 படம் மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில், கமல் பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடலாம் என்றும் மணிரத்னம் இயக்கத்தில் கமலும் நாயகன் படத்தில் நடித்துள்ளதால், அவரும் வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன.

தெலுங்கில் மகேஷ் பாபு

தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடப் போவதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வைக்க முதன்முதலில் முயற்சி செய்தார் இயக்குநர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X