அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
சென்னை : தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் முக்கியமானது, மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கனவு படமான இது இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.
லேட்டஸ்ட் தகவலின்படி, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் சூட்டிங் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். அடுத்த கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தாராம். இதை தற்போது மாற்றி, வேறு இடத்திற்கு மாற்றி உள்ளாராம்.

கொரோனாவால் தடுமாறும் பொன்னியின் செல்வன்
அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை அல்லது ஐதராபாத்கில் நடத்த உள்ளனராம். சரியான இடத்தை முடிவு செய்த பிறகு படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து பகுதிகளிலும் கொரோனா அதிகரித்து வருவதால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கார்த்தி வெளியிட்ட தகவல்
சமீபத்தில் கார்த்தி அளித்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்புக்கள் முடிந்து விட்டதாக கூறி இருந்தார். வரலாற்று காவிய படமான பொன்னியின் செல்வன் படத்தில் பல மொழிகளைச் சேர்ந்த இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

ஐதராபாத்தில் தாய்லாந்து செட்
இந்த படத்திற்காக அவரவர் கேரக்டருக்கு பல்வேறு சிறப்பு நிபுணர்களைக் கொண்டு குதிரையேற்றம், வாள் சண்டை உள்ளிட்ட பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் தாய்லாந்து வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டு வந்த காட்சிகள், தற்போது ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

மெகா பட்ஜெட் படம்
இந்த பிரம்மாண்ட படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. அதிகபட்சமாக ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











