twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் வெற்றி.. ஒத்தை ஆளாக கெத்து காட்டி சாதித்த மணிரத்னம்..சமூக வலைதளங்களில் பாராட்டு

    |

    பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதை அமைக்கவே பெரும் ஜாம்பவான்களால் முடியாதபோது ஒத்த ஆளாக கெத்து காட்டியுள்ளார் மணிரதனம்.

    ஒரு படத்தை எடுப்பது கடினம் என்றால் ஒரு காவியத்தை பெரும் பட்டாளத்தை வைத்துக்கொண்டு எடுப்பது அசாத்தியம் என்று பாராட்டுகின்றனர்.

    தனிமனிதராக திறமையாளர்களை வைத்து வென்று காட்டிய மணி ரத்னத்துக்கு சமூக வலைதளங்களில் பாரட்டு குவிகிறது.

    குந்தவையாகவே மாறிய அதீதி ஷங்கர்.. கலக்கல் போஸ் என ரசிகர்கள் கொஞ்சல்ஸ்! குந்தவையாகவே மாறிய அதீதி ஷங்கர்.. கலக்கல் போஸ் என ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!

    பொன்னியின் செல்வன் அசாதாரண வெற்றி

    பொன்னியின் செல்வன் அசாதாரண வெற்றி

    ஒரு படத்தை இயக்கி வெளிக்கொணர்வதே கடினம் என்று இருக்கிற காலக்கட்டத்தில் பொன்னியின் செல்வன் எனும் காவியத்தை நவீன காலத்தில் அனைவரும் ஏற்கும்படி, சரியான கதாநாயகர்கள், நாயகிகள், நடிகர்களை வைத்து இயக்கி, டெக்னிக்கலாகவும் சாதித்து பெருவெற்றி கண்டுள்ளார் மணி ரத்னம். இது அவரது அசாத்திய திறமைக்கு கிடைத்த வெற்றி என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

    மெதுவாக ஆரம்பித்த திரை வாழ்க்கை..வேகம் காட்டிய மணி ரத்னம்

    மெதுவாக ஆரம்பித்த திரை வாழ்க்கை..வேகம் காட்டிய மணி ரத்னம்

    மணி ரத்னத்தின் திரைவாழ்க்கை எந்த பின்னணியும் இல்லாமல் நேரடியாக சினிமாவுக்கு வருவதில்தான் ஆரம்பித்தது. அவரது முதல்படம் பல்லவி அனு பல்லவி, பின்னர் தமிழில் இதயக்கோயில். அவரது ஆரம்பம் மெதுவாக இருந்தது. போகப்போக மவுனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, செக்கச்சிவந்த வானம் என படத்துக்கு படம் வேகம் கூட்டி இறுதியாக ஒரு வரலாற்றை திரைக்காவியமாக எடுத்ததன் மூலம் தனிமனிதராக 40 ஆண்டுகளில் பெரிய சாதனைக்கு சொந்தக்காரராக மணிரத்னம் இருக்கிறார்.

    அனைத்து சாதனையாளர்களையும் ஒன்றிணைப்பது சாதனை

    அனைத்து சாதனையாளர்களையும் ஒன்றிணைப்பது சாதனை

    சாதாரணமாக இந்த வெற்றி கிடைக்காது. வெற்றியடைந்தால் தூக்கி கொண்டாடுவதும், தோல்வியுற்றால் பள்ளம் தோண்டி புதைப்பது திரையுலகினர் வழக்கம் எனத்தெரிந்தும் மணி ரத்னம் துணிந்து இறங்கினார். நவீன டெக்னாலஜி, தோட்டா தரணி போன்றோர் துணை, திரைக்கதைக்கு ஜெயமோகன், இசை ஏ.ஆர்.ரஹ்மான், சரியான பாத்திரங்களுக்கு சரியான தேர்வு, அவர்களுக்கு தொடர் பயிற்சி என மணிரத்னத்தின் உழைப்பு சாதாரண விஷயமல்ல.

    ஒத்தை ஆளாக கெத்து காட்டிய மணி ரத்னம்

    ஒத்தை ஆளாக கெத்து காட்டிய மணி ரத்னம்

    அனைத்தையும் ஒருங்கிணைப்பது இயக்குநரின் பணி என்றாலும், இது அனைத்தையும் தாண்டி இப்படி ஒரு படத்தை எடுக்க மணிரத்னம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடும் முயற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக நாயகன் கமல் போன்றோர்கூட கைவிட்ட நிலையில் தனது நம்பிக்கை எனும் தனி முயற்சியால் மணிரத்னம் சாதித்துள்ளார். அதாவது ஒத்தை ஆளாக கெத்து காட்டியுள்ளார் மணி ரத்னம்.

    English summary
    Mani Ratnam portrayed Ponni'yin Selvan creating a similar movie when the great legends could not make a screenplay. It is appreciated that if it is difficult to make a film, it is possible to make an epic with a large army. Mani Ratnam has been praised on social media for showing talent as an individual.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X