twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’பொன்னியின் செல்வன்’..எம்ஜிஆரின் நிறைவேறாத ஆசை..சாதித்து காட்டிய மணிரத்னம்..சுவாரஸ்ய பின்னணி தகவல்

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் கதை எம்ஜிஆர் காலத்து கனவுப்படம், எம்ஜிஆர் நடிக்க முடிவெடுத்து முடியாமல் போக பின்னர் அது பலகட்டங்களை கடந்து மணிரத்னம் மூலம் முயற்சிக்கப்பட்டு இறுதியில் விரைவில் வெளியாக உள்ளது.

    பொன்னியின் செல்வன் கதை 1950 களில் எம்ஜிஆர் நடிக்க ஆசைப்பட்டு பின்னர் அது நடக்காமல் போக பின்னர் பல முறை முயன்றும் படம் எடுக்கப்படாமல் போனது.

    இதன் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பலமுறை முயன்றார். கமல்ஹாசன், விஜய் என பயணப்பட்டு முடியாமல் போன படம் தற்போது மணிரத்னம் மூலமாக சாத்தியமாகியுள்ளது.

    குந்தவை ரோலுக்கு த்ரிஷா ஓகே வா...ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? குந்தவை ரோலுக்கு த்ரிஷா ஓகே வா...ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

    கல்கி, சாண்டில்யன் வரலாற்று நாவல்களின் புகழ்பெற்ற ஆசிரியர்கள்

    கல்கி, சாண்டில்யன் வரலாற்று நாவல்களின் புகழ்பெற்ற ஆசிரியர்கள்

    கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். இது 1950 ஆம் ஆண்டிலிருந்து 4 வருடங்கள் கல்கி வார இதழில் தொடராக வெளியானது. அந்த காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றோர் எழுதும் வரலாற்று நாவல்களுக்கு பெருமளவில் வாசகர் கூட்டம் இருந்தது. தமிழகத்தில் சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய புதினங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. சோழமன்னனை சுற்றி எழுதப்பட்ட புதினம் என்பதால் பொன்னியின் செல்வன் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    புராண, மன்னர் காலத்திய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 1940, 50 கள் காலம்

    புராண, மன்னர் காலத்திய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 1940, 50 கள் காலம்

    1950 களில் தமிழ் சினிமா பெரும்பாலும் புராண படங்கள், மன்னர் காலத்து கதை படங்களாக வந்தது. 1950 களுக்கு பின்னரே சமூக படங்கள் வெளியாக தொடங்கின. தமிழகத்தின் அன்றைய காலக்கட்டத்தின் முக்கிய கதாநாயகர்கள் குறிப்பாக எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன் போன்றோர் மன்னர் காலத்து படங்கள், புராண படங்களில் நடித்து புகழ் பெற்றனர்.

    நாடோடி மன்னனில் வெற்றிகண்ட எம்ஜிஆரின் ஆசை

    நாடோடி மன்னனில் வெற்றிகண்ட எம்ஜிஆரின் ஆசை

    தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன வாசன் தயாரிப்பில் வெளிவந்த சந்திரலேகா படமும் ஒரு மன்னர் காலத்திய கதைப் படமே. எம்.கே.ராதா, ராஜகுமாரி, ரஞ்சன் போன்றோர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகில் 50 களில் வெற்றிகரமான கதாநாயகனாக உருவெடுத்த சிவாஜி மனோகரா படத்தில் புகழ் பெற்றார், எம்ஜிஆர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் 1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் படத்தை எடுத்தார். அது பெரும் வெற்றி பெற்றது. இயல்பாகவே மன்னர் காலத்து படங்களில் வெற்றி வாகை சூடிய எம்ஜிஆருக்கு அதே காலக்கட்டத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

    எம்ஜிஆரின் நிறைவேறாத ஆசை

    எம்ஜிஆரின் நிறைவேறாத ஆசை

    பொன்னியின் செல்வனின் மையக் கதாபாத்திரம் வந்தியத்தேவன். மற்றும் அருள்மொழி வர்மன் பாத்திரங்கள். இரண்டையும் எம்ஜிஆரே நடிக்க முடிவெடுத்தார். அப்போதைய பிரபலங்கள் பத்மினி, சாவித்ரி, வைஜெயந்திமாலா, நம்பியார் என பலரை தேர்வு செய்தார் எம்ஜிஆர். நாடோடி மன்னனின் குழுவே இதிலும் இடம்பெற்றது. விளம்பரமும் வெளியானது. எம்ஜிஆர் கால் உடைந்து விபத்தில் சிக்க பொன்னியின் செல்வன் வேலைகள் தடைபட்டன. எம்ஜிஆரின் திரை வாழ்க்கை மீண்டு வருமா என்கிற கேள்விக்குறி எழுந்த நிலையில் அவர் மீண்டு வந்தபோது வரிசைக்கட்டி நின்ற படங்களை முடிக்கும் நிலையில் இருந்ததால் பொன்னியின் செல்வனை தள்ளி வைத்தார்.

    எம்ஜிஆருக்கு ஏமாற்றம் தந்த இயக்குநர் மகேந்திரன்

    எம்ஜிஆருக்கு ஏமாற்றம் தந்த இயக்குநர் மகேந்திரன்

    ஆனால் எம்ஜிஆர் மனதில் எப்போதுமே பொன்னியின் செல்வனை தயாரித்து நடிக்க வேண்டும் என்கிற ஏக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் திமுக ஆட்சி, அண்ணா மறைவு, அரசியலில் அதிக கவனம் என எம்ஜிஆர் பிசியானார். பின்னர் அதிமுகவை தொடங்கினார். அந்த நேரத்தில் தனக்கு அறிமுகமான இயக்குநர் மகேந்திரனிடம் பொன்னியின் செல்வன் திரைக்கதையை வடிவமைக்கச் சொன்னார். மகேந்திரனும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகேந்திரனும் பிசியாகவே அவரும் அதிக ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். ஆனால் அவரும் எம்ஜிஆர் ஆசையை நிறைவேற்றவே இல்லை.

    பாரதிராஜாவிடம் பொன்னியின் செல்வனை எடுக்க கேட்டுக்கொண்ட எம்ஜிஆர்

    பாரதிராஜாவிடம் பொன்னியின் செல்வனை எடுக்க கேட்டுக்கொண்ட எம்ஜிஆர்

    அதன் பின்னர் எம்ஜிஆர் இயக்குநர் பாரதிராஜாவிடம் பொன்னியின் செல்வனை இயக்கும் படி கேட்டுக்கொண்டார். கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடிப்பதாக முடிவானதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் கிராமிய கதைகளை நோக்கி நகர்ந்த நேரங்களில் பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்க பலருக்கும் நேரமில்லாமல் போனது. அதற்குள் தமிழக அரசியலில் மாற்றம் எம்ஜிஆர் உடல் நிலை பாதிப்பு போன்றவைகளால் அது நடக்காமல் போனது. தனது 30 ஆண்டு கனவை நிறைவேற்ற முடியாமல் எம்ஜிஆர் மறைந்தார்.

    1990 களில் மணி ரத்னமே முயன்று முடியாமல் ஒதுங்கிய கதை

    1990 களில் மணி ரத்னமே முயன்று முடியாமல் ஒதுங்கிய கதை

    ஆனாலும் பொன்னியின் செல்வன் கதை ஆக்கம் அடுத்தடுத்த மனிதர்களிடம் நகர்ந்தது. 80 களின் இடைப்பட்ட காலத்தில் பல நல்ல படங்களை கொடுத்த மணிரத்னம் (இப்ப பொன்னியின் செல்வனை எடுப்பவர்தான்) பொன்னியின் செல்வனை எடுக்க முடிவெடுத்தார். கமல்ஹாசனிடம் தான் கதை போய் நின்றது. ஆனால் விஎஃப்டி, கிராபிக்ஸ் போன்ற உயர் தொழில் நுட்பம், தகுதியான ஒலி, ஒளிப்பதிவு முன்னேற்றங்கள் இல்லாத 90 களின் காலக்கட்டத்தில் இது மிகுந்த பொருட் செலவாகும் என தெரிந்தது.

    டெக்னாலஜி, மார்க்கெட் வளர்ச்சி களத்தில் குதித்த மணிரத்னம்

    டெக்னாலஜி, மார்க்கெட் வளர்ச்சி களத்தில் குதித்த மணிரத்னம்

    அவ்வளவு பொருட் செலவில் எடுக்கப்பட்டாலும் அதற்கான தற்போது உள்ளதுபோல் விரிவடைந்த மார்க்கெட்டிங் சிஸ்டம் இல்லாத நிலை, படபிடிப்பு நடக்கும் இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செட் போட்டால் உயர்ந்த தயாரிப்புச் செலவு மணி ரத்னத்தை முடக்கியது. ஆனாலும் மணிரத்னத்துக்குள் எம்ஜிஆரைப்போலவே பொன்னியின் செல்வன் ஒளி எரிந்துக்கொண்டே இருந்தது. காலம் மாற டெக்னாலஜி வளர்ச்சி, தென் இந்திய சினிமாக்களில் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்கள் சாதித்த வெற்றி மீண்டும் மணிரத்னம் களத்தில் குதித்தார்.

    விஜய், மகேஷ்பாபுவை போட்டும் தடைப்பட்ட படம்

    விஜய், மகேஷ்பாபுவை போட்டும் தடைப்பட்ட படம்

    விஜய், மகேஷ்பாபு, அனுஷ்கா போன்றோரை வைத்து போட்டோஷூட் எடுக்கப்பட்டு படம் ஆரம்பிப்பதாக கூறப்பட்டது, ஆனால் அந்த முயற்சியும் முடியாமல் போனது என தகவல் வெளியானது. பின்னர் நீண்ட முயற்சிக்குப்பின் பொன்னியின் செல்வன் படமாக்கப்படும் முயற்சி இறுதி வடிவம் பெற்றது. விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க படம் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் பிரம்மாண்டம், படத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம், பெரிய அளவிலான கலைஞர்களின் பங்களிப்பு தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

    எம்ஜிஆரின் ஆசையை நிறைவேற்றும் கதாநாயகியின் மகன்

    எம்ஜிஆரின் ஆசையை நிறைவேற்றும் கதாநாயகியின் மகன்

    இந்நிலையில் இந்த கதையை எம்ஜிஆர் உருவத்தில் அனிமேஷன் பிக்சராக வெப் சீரீஸ் போல் பல எபிசோடுகளுடன் தயாரிக்க எம்ஜிஆரின் ஜெனோவா பட கதாநாயகி ஓமனாவின் மகன் அஜய் பிரதீப் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் ஆசைப்பட்டப்படி வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் இரண்டு பாத்திரங்களிலும் எம்ஜிஆரை கிராபிக்ஸ் செய்து மற்ற பாத்திரங்களில் நிஜ நடிகர்களை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாதிக்குமா பொன்னியின் செல்வன்? பெரும் எதிர்பார்ப்பு

    சாதிக்குமா பொன்னியின் செல்வன்? பெரும் எதிர்பார்ப்பு

    பொன்னியின் செல்வன் படம் வருவதற்கு முன்னரே பல எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும், எம்ஜிஆர், கமல் போன்ற ஆளுமைகள் நடிக்க முடியாமல் போன படம் என்கிற பல தகவல்களுடன் வரப்போகும் பொன்னியின் செல்வனி வந்தியத்தேவனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக கார்த்தியும் இன்ன பிற பாத்திரங்களும் அந்த நாவலைப்படித்தபோது நம்முள் எழுந்த அந்த கற்பனை பாத்திரங்களை நிஜமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவார்களா பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    English summary
    Ponni's Selvan Movie is the dream film of MGR. He tried to act in that movie but unfortunately, it did not happen. This movie went through many stages and was attempted by Mani Ratnam and finally, it will be released soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X