புடவை வரை வந்த ‘பொன்னியின் செல்வன்'..அட செம மேட்டரா இருக்கே!

சென்னை : பொன்னியின் செல்வன் 30ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரம் புடவை வரை சென்றுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதியை பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்கிய நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்றது. தற்போது படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல், டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

வந்தியத்தேவனாக கார்த்தி

வந்தியத்தேவனாக கார்த்தி

இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். அதேபோல, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளனர்.

புடவையில் விளம்பரம்

புடவையில் விளம்பரம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் விளம்பரம் புடவை வரை சென்றுள்ளது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலன், நந்தினி, குந்தவை, அருள்மொழிவர்மன் மற்றும் பல கதாபாத்திரங்களின் புகைப்படங்களை புடவையில் அழகாக பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த புடவைக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X