வெளியானது பொன்னியின் செல்வன் சோழா சோழா வீடியோ பாடல்.. தொடர்ந்து ட்ரெண்டிங்!

சென்னை : நடிகர்கள் ஜெயம்ரவி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 30ம் தேதி ரிலீசானது பொன்னியின் செல்வன்.

இநத்ப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் வசூல் 500 கோடியை நெருங்கி வருகிறது.

இந்தப் படத்தின் மேக்கிங்கை சிறப்பாக அமைந்திருந்தார் மணிரத்னம். இந்தக் காட்சிகள் அனைத்தும் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படத்தை மிகச்சிறந்த கதை, திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதே பிரம்மாண்டத்துடன் வெளியான பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களை எடுக்க ராஜமௌலிக்கு 5 ஆண்டுகள் பிடித்துள்ளன.

அரண்டுப்போன ராஜமௌலி

அரண்டுப்போன ராஜமௌலி

சரியான திட்டமிடலுடன் பொன்னியின் செல்வன் படத்தை வெறுமனே 150 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்க அவருக்கு 150 நாட்களே பிடித்துள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட இயக்குநர் ராஜமௌலியே அரண்டதாக படத்தில் நடித்துள்ள ஜெயம்ரவி தெரிவித்திருந்தார்.

மணிரத்னத்தின் ஈர்ப்பு

மணிரத்னத்தின் ஈர்ப்பு

அமரர் கல்கியின் இந்த மாபெரும் படைப்பை நீண்ட காலங்களாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னம், இந்தக் கதையின்பால் அதிகமான ஈர்ப்பை வைத்திருந்ததாலேயே சரியான திட்டமிடல் அவருக்கு சாத்தியமாகியுள்ளதாக விமர்சகர்களும் ரசிகர்களும் கமெண்ட் தெரிவித்தனர்.

பொன்னியின் செல்வன் வசூல்வேட்டை

பொன்னியின் செல்வன் வசூல்வேட்டை

இந்தப் படத்தின் வசூல் 450 கோடிகளை தாண்டியுள்ள நிலையில், விரைவில் 500 கோடி ரூபாய் வசூலை படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. படத்தின் இசை வெளியீடு மற்றும் மும்பை பிரமோஷன்களில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பங்கேற்று சிறப்பு செய்தார்.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

படத்தில் அவரது கைவண்ணத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பழமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியதாக ஏஆர் ரஹ்மான் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சோழா சோழா வீடியோ பாடல்

சோழா சோழா வீடியோ பாடல்

இதனிடையே இந்தப் படத்தின் சோழா, சோழா பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக இந்தப் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இந்நிலையில் தற்போது வீடியோ பாடலாக இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆதித்த கரிகாலன் ஆட்டம்

ஆதித்த கரிகாலன் ஆட்டம்

இந்தப் பாடலில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்த விக்ரம் தன்னுடைய கூட்டாளிகளோடு இணைந்து வெறித்தனமாக ஆடியிருப்பார். அந்தப் பாடலை தற்போது ரசிகர்கள் யூடியூபில் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களை பாடல் பெற்றுள்ளது. ட்விட்டரிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X