கார்த்தியின் இன்ட்ரோ பாடலுடன் ஆரம்பமாகும் பொன்னியின் செல்வன்.. பாடலின் தொடக்க வரிகள் இதுதானா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்ப பாடல் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் மணிரத்னமுடன் இணைந்து இந்த படத்தின் பாடல்களை உருவாக்கி வருகிறார்.

நடிகர் கார்த்தியின் இன்ட்ரோ பாடல் தொடங்கும் வரிகள் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

ஏப்ரல் மாதம் ரிலீஸ்

ஏப்ரல் மாதம் ரிலீஸ்

லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரலில் பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டாலும் தள்ளிப் போகாமல் தைரியமாக தங்கள் படத்தை வெளியிட இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்த நிலையில், அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதை விட பிரம்மாண்ட இதிகாச படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் காவிய படைப்பான பொன்னியின் செல்வன் உருவாகி உள்ள நிலையில், பின் வாங்கும் எண்ணத்தை படக்குழு நினைக்கவே இல்லையாம்.

வந்தியத்தேவனிடம் தான் ஆரம்பம்

வந்தியத்தேவனிடம் தான் ஆரம்பம்

ராஜ ராஜ சோழனின் கதையின் புனைவு நாவலே பொன்னியின் செல்வன். மற்ற கதாபாத்திரங்களுக்கு வரலாற்று கூறுகள் உள்ள நிலையில் அமரர் கல்கி இந்த கதையை தான் சொல்வது போல் அல்லாமல் வந்தியத்தேவன் எனும் கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதையை எழுதியதாக ஒரு கருத்து உள்ளது. இந்த படமும் வந்தியத்தேவனிடம் இருந்தே ஆரம்பமாகும் என்கிற தகவலும் தீயாக பரவி வருகிறது.

கார்த்தியின் இன்ட்ரோ பாடல்

கார்த்தியின் இன்ட்ரோ பாடல்

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருள் மொழி வர்மனாக நடித்திருந்தாலும் கதைப்படி நாயகன் கார்த்தி தான். வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தியின் இன்ட்ரோ பாடல் வரிகள் குறித்த அட்டகாசமான ஹாட் அப்டேட் தான் தற்போது கசிந்துள்ளது.

இதுதான் வரிகளா?

இதுதான் வரிகளா?

எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் போல படத்தின் ஆரம்ப பாடல் இருக்க வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் ஏ.ஆர். ரஹ்மானிடம் கோரிக்கை வைத்த நிலையில், "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" எனும் ஆரம்ப வரிகளுடன் பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்ப பாடல் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரீமிக்ஸா?

ரீமிக்ஸா?

1957ம் ஆண்டு நடிகர் ரங்கன் நடிப்பில் வெளியான நீலமலைத் திருடன் படத்தில் இதே வரிகளுடன் இடம்பெற்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கே.வி. மகாதேவன் இசையில் டி.எம். செளந்தரராஜன் பாடிய அதே பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்களா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. நீலமலைத் திருடன் படத்தின் கதை எம்ஜிஆருக்காக உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் அதில் நடிக்கவில்லை என்பது தனிக் கதை.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் பிசினஸ் வேலைகளையும் விரைவில் ஆரம்பிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் நிகழ்வு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X