சாதனை மேல் சாதனை புரியும் பொன்னியின் செல்வன்..உலக நாடுகளில் வசூல் விவரம்..ரஜினி பட சாதனை முறியடிப்பு

பொன்னியின் செல்வன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. எந்திரன், கபாலிபோல் ரூ.300 கிளப்பில் இணைந்தது.

வெளிநாடுகளில் வசூலில் பல சாதனைகளை இப்படம் நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் கபாலி பட சாதனையை முறியடித்து 2.0 படத்தை நோக்கி முன்னேறுகிறது.

இரண்டாம் பாகம் வெளியாகும் முன் முதல்பாகம் வசூல் சாதனை இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

 படத்துக்கான ப்ரமோஷன் வெற்றிக்கு காரணம்

படத்துக்கான ப்ரமோஷன் வெற்றிக்கு காரணம்

பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தமிழகம் தாண்டி இந்திய அளவிலும் ஓவர்சீஸ் அளவிலும் வெற்றிநடைப்போட்டு வருகிறது. படம் வெளியாகும் முன் படக்குழுவினர் அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டது வீண்போகவில்லை. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்த நிலையில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

 நடிகர்கள் அல்லாமல் இயக்குநர் படத்துக்கு கிடைத்த சாதனை

நடிகர்கள் அல்லாமல் இயக்குநர் படத்துக்கு கிடைத்த சாதனை

பொன்னியின் செல்வன் வெளியானதுமுதல் உள்நாட்டு வெளிநாட்டு சாதனைகளை முறியடித்து வருகிறது. பொன்னியின் செல்வனின் மொத்த வசூல் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் இப்படம் சாதனை செய்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த இந்த வரலாற்று தழுவல் திரைப்படம் அமெரிக்காவில் $4.61 மில்லியன் (ரூ 37 கோடி) சம்பாதித்து, ரஜினிகாந்தின் 'கபாலி' படத்தின் வாழ்நாள் வசூலான $4.58 மில்லியனை முறியடித்துள்ளது. அடுத்த இலக்கை நோக்கி நகரும் பொன்னியின் செல்வன் இப்போது அமெரிக்காவில் ரஜினியின் 2.0 படத்திற்குப் பின் நான் இரண்டாவது பெரிய தமிழ்ப் படமாக உள்ளது.

 அமெரிக்காவிலும் முதலிடம்

அமெரிக்காவிலும் முதலிடம்

இது மட்டுமல்ல அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படமாக பொன்னியின் செல்வன் மாறியுள்ளது. நேற்றைய இரவு 10 மணி நிலவரப்படி அமெரிக்காவில் 175,000 அமெரிக்க டாலர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இது காட்ஃபாதர் படத்தின் ஒரு நாள் வசூலான 145,000 விட அதிகம். மூன்றாவது இடத்தில் கண்டரா படமும் 19000 டாலருடன் உள்ளது. அதுமட்டுமல்ல முதல் தமிழ் படமாக பொன்னியின் செல்வன் ஆஸ்திரேலியாவில் 1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வசூலை குவித்துள்ளது. அதிலும் இரண்டாம் இடத்தில் ரஜினியின் 2.0 படத்தின் வசூலான 1.38 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை முறியடித்துள்ளது.

 300 கோடி ரூபாய் கிளப்பில் ரஜினி கமல் படங்களுடன் இணைந்த பொன்னியின் செல்வன்

300 கோடி ரூபாய் கிளப்பில் ரஜினி கமல் படங்களுடன் இணைந்த பொன்னியின் செல்வன்

இதுவல்லாமல் பொன்னியின் செல்வன் படம் புதிய சாதனையையும் படைத்துள்ளது. சாதனைக்கு எப்போதும் சொந்தக்காரரான ரஜினிகாந்தின் எந்திரன், கபாலி, 2.0 படங்களுடன் சமீபத்தில் இணைந்த கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் சேர்த்து 5 வது படமாக 300 கோடி ரூபாய் கிளப்பில் பொன்னியின் செல்வன் இணைந்துள்ளது. இது மிகப்பெரிய நடிகர்கள் நடிக்காமல், கதை, காட்சி அமைப்பு, இயக்குநரை வைத்து வந்த மிகப்பெரிய வெற்றி என்றால் நம்ப முடியாத விஷயம் தான் ஆனால் மணி ரத்னம் அதை சாதித்துள்ளார். கோலிவுட் படங்களில் மிக விரைவாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

 ஆஸ்திரேலியாவில் டாப் 10 வசூலில் 4 வது இடம்

ஆஸ்திரேலியாவில் டாப் 10 வசூலில் 4 வது இடம்

அதுமட்டுமல்ல மலேஷியாவில் பொன்னியின் செல்வன் வியத்து சாதனையை படைத்துள்ளது. மலேஷியாவில் 2022 ஆம் ஆண்டு அதிக வசூலை பெற்ற படம் விக்ரம். அதன் சாதனையை இந்த ஆண்டே பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. 500,000 டிக்கெட்டுகள் இதுவரை விற்கப்பட்டுள்ளது. மலேஷிய ரூபாயில் 11.18 மில்லியனை ஈட்டியுள்ள்து பொன்னியின் செல்வன். இது சமீபத்திய கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூல் சாதனையைவிட அதிகம். அதுமட்டுமல்ல அதிக வசூலில் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் டாப் டென் இடத்தில் 4 வது இடத்தில் பொன்னியின் செல்வன் இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X