மிரட்டலான பிரமோஷன்கள்.. பொன்னியின் செல்வன் டீம் இப்ப எங்க இருக்காங்க தெரியுமா?

டெல்லி : நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

கல்கியின் வரலாற்றுப் படைப்பான இந்தப் படத்தை தன்னுடைய கனவு முயற்சியாக இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு நனவாகியுள்ளது. கல்கியின் வசீகரமான எழுத்தை வாசித்த வாசகர்களின் கனவும்தான்.

30ம் தேதி ரிலீஸ்

30ம் தேதி ரிலீஸ்

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

சென்னையில் துவங்கிய பிரமோஷனல் டூர்

சென்னையில் துவங்கிய பிரமோஷனல் டூர்

இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வரும் நிலையில், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரமோஷனல் டூரை சென்னையில் இருந்து துவங்கினர். தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, ஐதராபாத்தி உள்ளிட்ட இடங்களில் இவர்கள் தங்களது சிறப்பான பிரமோஷனை நடத்தி முடித்துள்ளனர்.

டெல்லியில் பிரமோஷன்

டெல்லியில் பிரமோஷன்

தொடர்ந்து மும்பையிலும் படத்தின் பிரமோஷன் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்றைய தினம் டெல்லியில் படத்திற்கான பிரமோஷனை படக்குழு நடத்தவுள்ளது. இதற்காக தற்போது டெல்லியில் அவர்கள் லேண்ட் ஆகியுள்ளனர். இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

உற்சாகத்துடன் டீம்

உற்சாகத்துடன் டீம்

லைகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி த்ரிஷா உள்ளிட்டவர்களை காண முடிந்தது. படத்திற்கு மக்கள் மத்தியில் காணப்படும் சிறப்பான வரவேற்பு காரணமாகவோ என்னவோ அவர்கள் அனைவரது முகங்களிலும் உற்சாகத்தை காண முடிந்தது. தொடர்ந்து இன்று மாலை படத்திற்கான பிரமோஷன் நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X