விஷ வாயு, திரை கிழிப்பு..மிரட்டலை மீறி கனடாவில் வெளியானது பொன்னியின் செல்வன்..உற்சாகத்தில் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. கடும் மிரட்டலை மீறி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடான கனடாவிலும் வெளியானது.

பொன்னியின் செல்வனை கனடாவில் திரையிடக்கூடாது, மீறினால் கடும் விளைவு ஏற்படும் என பகீரங்கமாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

படத்தை வெளியிட்டால் திரைகளை கிழிப்போம், தியேட்டருக்குள் விஷவாயுவை செலுத்துவோம் என மிரட்டலில் கூறப்பட்டிருந்ததை மீறி படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

உலகெங்கும் வெளியான பொன்னியின் செல்வன்

உலகெங்கும் வெளியான பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால முயற்சி தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று வெளியானது. மணிரத்னத்தின் இயக்கத்தில் லைகா நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டுத்தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியானது. சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் படம் இன்று வெளியானது.

கனடா, லண்டனில் படம் வெளியிட கூடாது என மிரட்டல்

கனடா, லண்டனில் படம் வெளியிட கூடாது என மிரட்டல்

இந்நிலையில் கனடாவின் ஹாமில்டன், கிச்சனர் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 படத்தை வெளியிட தயாராகி வந்த நிலையில், பலருக்கும் திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் வழியாக வந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டில் திரையரங்குகளில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக இம்மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்திய படங்களே வெளியிடக்கூடாது என மிரட்டல்

இந்திய படங்களே வெளியிடக்கூடாது என மிரட்டல்

தமிழ் திரைப்படங்கள் நீண்ட காலமாக கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. கனடாவில் இந்தியர்கள் அதிகமாக தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ் படம் மட்டுமல்ல இந்திய படங்களையே வெளியிடக்கூடாது என்று கடும் மிரட்டல் சமீப காலமாக கனடா, லண்டன் திரைப்பட விநியோகஸ்த்தர்களுக்கு விடுக்கப்படுகிறது. அதன் எதிரொலியாகத்தான் பொன்னியின் செல்வனை திரையிடக்கூடாது, துல்கர் சல்மானின் சுப் படத்தை திரையிடக்கூடாது என்கிற மிரட்டல்.

மின்னஞ்சலில் கனடாவின் பிரபல நிறுவனத்திற்கு வந்த மிரட்டல்

மின்னஞ்சலில் கனடாவின் பிரபல நிறுவனத்திற்கு வந்த மிரட்டல்

கனடாவில் உள்ள பொன்னியின் செல்வன் வெளிநாட்டு விநியோகஸ்தரான KW டாக்கீஸ் தங்கள் நிறுவன மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் வாசக ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. "ஹாமில்டன், கிச்சனர் மற்றும் லண்டனில் இருந்து எங்களிடம் அப்டேட்கள் உள்ளன. பொன்னியின் செல்வன் தமிழ், சுப் இந்திப்படம் அல்லது கேடபிள்யூ டாக்கீஸில் இருந்து ஏதேனும் திரைப்படத்தை இயக்கினால் தாக்கப்படும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட கேடபிள்யூ டாக்கீஸ் மூலம் விநியோகம் செய்யப்படும் திரைப்படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் இயக்கினால், திரையை கிழித்து அப்பகுதியில் 'நச்சு வாயுவை செலுத்துவோம்' என்று அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தது.

அனைத்து மிரட்டல்களையும் முறியடித்து வெளியான பொன்னியின் செல்வன்

அனைத்து மிரட்டல்களையும் முறியடித்து வெளியான பொன்னியின் செல்வன்

மிரட்டல் காரணமாக நாளை திட்டமிட்டப்படி கனடா மற்றும் லண்டனில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அனைத்து மிரட்டல்களையும் மீறி பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் பலத்த ஆதரவு கொடுத்துள்ளனர். படம் வெற்றிகரமாக ஓடுகிறது என கனடா விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X