ரஜினியே நடிக்க விரும்பிய பொன்னியின் செல்வன்..நடிக்க மறுத்த அமலாபால்..துணிச்சல் அதிகம் தான்

பொன்னியின் செல்வன் படத்திற்காக தன்னை மணி ரத்னம் அணுகியதாகவும் அதை தாம் அதை மறுத்துவிட்டதாகவும் அமலாபால் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு சிறு வேடமாவது கொடுங்கன்னு ரஜினி மணிரத்னத்திடம் ஆசையாக கேட்ட பொன்னியின் செல்வனில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக அமலாபால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கடாவர் படத்தை தயாரித்து அமலாபால் நடித்திருந்தார். இந்தப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 சாதனையாளர்கள் தயாரிக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம்

சாதனையாளர்கள் தயாரிக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம்

பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டவர்கள் முயன்று முடியாமல் போக லைகா தயாரிக்க மணிரத்னம் தற்போது அதை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் வந்தியதேவன், அருள்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன், குந்தவை, நந்தினி என பல கேரக்டர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் வந்திய தேவன் பாத்திரத்தில் நடிக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆசைப்பட்டனர். ரஜினியை இந்த வேடத்திற்கு சரியானவர் என ஜெயலலிதா, சிவாஜி கணேசன் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் வாய்ப்பு கார்த்திக் வசம் போனது.

 பொன்னியின் செல்வனில் நடிக்க பலரும் ஆசைப்பட அமலாபால் பால் மறுப்பு

பொன்னியின் செல்வனில் நடிக்க பலரும் ஆசைப்பட அமலாபால் பால் மறுப்பு

பொன்னியின் செல்வனில் நடிப்பதை ஒரு பெரிய அச்சீவ்மெண்டாக பல நடிகர்களும் பொறாமையுடன் பார்க்கின்றனர். காரணம் பொன்னியின் செல்வனில் நடிப்பது ஒரு புகழ்பெற்ற பலரும் முயற்சி செய்து முடியாமல் போன படத்தில் தானும் ஒரு அங்கம் என்கிற பெருமை. மறுபுறம் மிகப்பெரும் ஆளுமை இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்கிறோம் என்கிற பெருமை. இதனால் பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்புக்காக ஆடிஷன் போய் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்தில் பல நடிகர்கள் உள்ளனர்.

 ஆடிஷன் போய் நிராகரிக்கப்பட்ட அமலாபால், முதலில் வருத்தம்

ஆடிஷன் போய் நிராகரிக்கப்பட்ட அமலாபால், முதலில் வருத்தம்

ஆனால் நடிகை அமலாபால் தனக்கு வந்த வாய்ப்பை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார். அவரவர் வாய்ப்புக்கிடைக்காதா? என காத்திருக்க இவர் வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி இதழுக்கு அமலாபால் அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வனுக்காக மணிரத்னம் தன்னை ஆடிஷன் செய்ததாகவும், தான் மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும், காரணம் "நான் மணி சாரின் மிகப்பெரிய ரசிகை, அதனால் படத்தில் நடிக்க மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆனால் அது அந்த நேரத்தில் நடக்கவில்லை. இதனால் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

 மீண்டும் அழைத்த மணிரத்னம் மறுத்த அமலாபால்

மீண்டும் அழைத்த மணிரத்னம் மறுத்த அமலாபால்

2021 ஆம் ஆண்டில் அதே படத்திற்கு நடிக்க மணிரத்னம் தன்னை மீண்டும் அழைத்ததாகவும், ஆனால் அதைச் செய்யும் உரிய மனநிலையில் நான் இல்லை, அதனால் அந்த வாய்ப்பை மறுத்து விட நேரிட்டதாகவும் அமலாபால் தெரிவித்துள்ளார். இதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என கேட்டதற்கு "நான் அதைச் செய்ததற்காக வருத்தப்படுகிறீர்களா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், இல்லை என்று சொல்வேன். சில விஷயங்கள் சரியானவையாக இருக்கும், சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பேன். எதையும் நாம் எப்படி அந்த விஷயத்தை பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 ரஜினியே வேடம் கேட்ட பொன்னியின் செல்வனில் வாய்ப்பை மறுத்த அமலாபால்

ரஜினியே வேடம் கேட்ட பொன்னியின் செல்வனில் வாய்ப்பை மறுத்த அமலாபால்

நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டின்போது பேசும்போது எனக்கு சின்னதா இந்தபடத்தில் ஒரு ரோல் கேட்டேன், அட பழுவேட்டரையார் ரோலாவது கொடுங்கன்னு கேட்டேன், மணி மறுத்துவிட்டார் என சொன்னார். அப்படி சூப்பர் ஸ்டர் ரஜினியே ஆசைப்பட்ட படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அமலாபால் மறுத்தது அவரது துணிச்சலைத்தான் காட்டுகிறது. இதனிடையே மற்றொரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் "பொறுத்தமில்லாத வேடத்தில் நடித்து விமர்சனத்துக்குள்ளாக விரும்பவில்லை, மணி சாரின் அடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்" என தெரிவித்துள்ளார்.அமலாபாலை என்ன ரோலுக்காக அழைத்தார் மணி ரத்னம் என்பதை கடைசிவரை அவர் சொல்லவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X