ரஜினி – கமல் கன்பார்ம்.. களைகட்டும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா!

சென்னை : பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாக சரியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதில், சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

பட நகரங்களில் படப்பிடிப்பு

பட நகரங்களில் படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் என பல கட்டங்களாக பல நகரங்களில் நடந்து முடிந்தது. இதையடுத்து, மோஷன் போஸ்டர், கேரக்டர்கள் போஸ்டர், டீசர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக துவக்கியது.

சோழா சோழா பாடல்

சோழா சோழா பாடல்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் 6 பாடல்களும், இரண்டாம் பாகத்தில் ஆறு பாடல்கள் என மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. இதில் முதல் பாடலாக பொன்னி நதி, இரண்டாவது பாடலான சோழா சோழா வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரஜினி – கமல் கன்பார்ம்

ரஜினி – கமல் கன்பார்ம்

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் செப்டம்பர் 6ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவானது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறும் என்றும் படக்குழு அறிவித்து உள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவலால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X