Sara Arjun: ப்பா.. ஒரே ஃபிரேமில் டபுள் நந்தினி.. ஐஸ்வர்யா ராயுடன் செல்ஃபி எடுத்த சாரா அர்ஜுன்!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தியேட்டர்களில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ராயுடன் சாரா அர்ஜுன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிலா பாப்பாவாக சியான் விக்ரமின் மகளாக தெய்வத்திருமகள் படத்தில் அறிமுகமானார் சாரா அர்ஜுன்.

Ponniyin Selvan Nandhinis in a single frame; Aishwarya Rai and Sara Arjun selfie goes trending

பேபி சாராவாக தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல இந்திப் படங்களிலும் நடித்து வந்த சாரா அர்ஜுன் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக அழகு பதுமையாக நடித்திருந்தார்.

இளம் வயது நந்தினியாக சாரா: நந்தினியாகவும் மந்தாகினியாகவும் ஐஸ்வர்யா ராய் டபுள் ரோலில் மிரட்டிய நிலையில், இளம் வயது நந்தினியாக எந்தவொரு பழி வாங்கும் உணர்வில்லாமல் பவ்யமாக பால் மேனியுடன் பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களை கவரும் விதமாக நடித்து கலக்கி இருந்தார் சாரா அர்ஜுன்.

Ponniyin Selvan Nandhinis in a single frame; Aishwarya Rai and Sara Arjun selfie goes trending

முதல் பாகத்தில் சிம்மாசனத்தை ஐஸ்வர்யா ராய் பார்க்கும் போது இளம் வயது நந்தினியான சாரா அர்ஜுன் அதில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஃபிரேம் ரசிகர்களை புல்லரிக்கச் செய்திருக்கும்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் முதல் ஃபிரேமிலேயே குளத்தில் இருந்து குளித்தபடி நந்தினி சாரா அர்ஜுன் வெளியே வரும் காட்சியைத் தான் வைத்திருப்பார். பொன்னியின் செல்வன் 2வில் இளம் வயது நந்தினி மற்றும் இளம் வயது ஆதித்த கரிகாலனின் காதல் காட்சிகளையும் குந்தவை மற்றும் அரச குடும்பத்தினரின் சூழ்ச்சியால் அவர்கள் எப்படி பிரிகின்றனர் என்பதையும் தெளிவாகக் காட்டிய பின்னர் தான் கடலில் விழுந்த பொன்னியின் செல்வன் என்ன ஆனார் என்கிற கதைக்கே வருவார்கள்.

Ponniyin Selvan Nandhinis in a single frame; Aishwarya Rai and Sara Arjun selfie goes trending

ஒரே ஃபிரேமில் இரண்டு நந்தினி: பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக சாரா அர்ஜுனும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிப்பில் மிரட்டிய நிலையில், தற்போது இருவரும் ஒரே ஃபிரேமில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகை சாரா அர்ஜுன் ஷேர் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு டஃப் போட்டி கொடுக்க ஒருத்தர் வந்துட்டாங்க என சாரா அர்ஜுனை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் அப்பாவி இளம் நந்தினியாக நடித்துள்ள சாரா அர்ஜுன் அடுத்ததாக சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கொட்டேஷன் கேங் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் எல்லாம் நடித்து ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X