விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் சூட்டிங்...ரிலீஸ் எப்போ தெரியுமா ?

சென்னை : எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், 5 பாகங்களாக வெளி வந்தது. இந்த நாவலை சினிமாவாக எடுக்க வேண்டும் என்பது பல டைரக்டர்களின் பல ஆண்டு கனவு.

 PONNIYIN SELVAN PART 1 & 2 MOVIES TO RELEASE ALONG THESE DATES?

இந்த கனவை தற்போது நிஜமாக்கி உள்ளார் டைரக்டர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக எடுப்பதற்கான பணிகளை அவர் எப்போதோ துவங்கி விட்டார். கிட்டதட்ட இது முடியும் நிலையில் உள்ளது என்றே சொல்லலாம்.

மணிரத்தனம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. முதல் பாகத்திற்கான வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிட்டதட்ட படத்தின் பணிகள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று இரண்டாம் பாகத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ம் ஆண்டு மே மாதத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரியாஸ் கான் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X