70th national film awards: பொன்னியின் செல்வன் 1.. நான்கு விருதுகளை தட்டித்தூக்கியது!
சென்னை : 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. . 2022ஆம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் பொன்னியின் செல்வன் பாகம் 4 மூன்று விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன. இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பொன்னியின் செல்வன் 1: அதில், சிறந்த திரைப்படமாக பொன்னியன் செல்வன் முதல் பாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும், சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை, தமிழ் படத்திற்கு 6 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நான்கு விருதுகளை பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கும், இரண்டு விருதுகள் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கும் கிடைத்துள்ளது.
மகத்தான வசூல்: மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்வை பெற்றது. உலக அளவில் 500 கோடிக்கு மேல் வசூலானது. இப்படத்தில், சியான் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும், திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்தில், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருந்தார். இப்படத்தை பார்க்க ரசிகர்கள் சாரை சாரையாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.


Click it and Unblock the Notifications











