PS 2 : ரிலீசுக்கு முன்பே வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் 2.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் வசூலை அள்ளி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படை எடுத்து வந்து பார்த்தனர்.

இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ponniyin selvan part 2 advance booking in america huge sale

கனவுத்திரைப்படம் : பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவான இத்திரைப்படம் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தார்.

500 கோடி வசூல் : பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. பொன்னியின் செல்வன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்து படத்தைப்பார்த்து ரசித்தனர். இப்படம் 500 கோடி வரை வசூல் செய்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குழப்பத்தில் ரசிகர்கள் : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முதல் பாகத்திற்கு ப்ரோமோஷன் பல மொழிகளில் நடந்த நிலையில், இரண்டாம் பாகம் வெளியாக சில தினங்களே உள்ள போதும் எந்தவிதமான ப்ரோமோனும் நடைபெறாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ponniyin selvan part 2 advance booking in america huge sale

வாய் திறக்காத மணிரத்னம் : இரண்டாம் பாகம் ப்ரேமோஷன் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மணிரத்னம் முன்பே கேட்டுக்கொண்டால், நடிகர்கள் இந்த தேதியில் கால்ஷீட் எதுவும் கொடுக்காமல் ப்ரோமோஷனுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், ப்ரோமோஷன் குறித்து மணிரத்னம் இதுவரை எதுவுமே பேசாமல் இருக்கிறார். ஆடியோ வெளியீட்டு விழாவும் ஏதோ ஒப்புக்கு நடந்தது போல இருந்தது.

ரிலீசுக்கு முன்பே வசூல் மழை : இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு, அமெரிக்காவில் வரவேற்பு கிடைத்துள்ளது. 25 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கும் அதிக மதிப்பிலான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகின்றன எனவும் கூறப்படுகிறது. ரிலீசுக்கு முன்பே பொன்னியின் செல்வன் 2 வசூலை அள்ளி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளனர்.

ponniyin selvan part 2 advance booking in america huge sale

அனல் பறக்கும் முன்பதிவு : அமெரிக்க இணையவாசி ஒருவர், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் பலத்த வரவேற்புடன் தொடங்கியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் அதன் பின் வசூலை அள்ளியது அதே போலத்தான் இரண்டாம் பாகத்திலும் முன்பதிவில் அனல் பறக்கிறது என தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அமெரிக்காவில் ஐமேக்ஸ் மற்றும் 4டிஎக்ஸ் உள்ளிட்ட பல தியேட்டர்களில் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X