சென்னையில் துவங்கியது பொன்னியின் செல்வன் பிரமோஷனல் டூர்.. பத்திரிகையாளர்களை சந்தித்த டீம்!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்தப் படத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இது அவரது கனவுப்படம்.
இந்தப் படத்தின் பிரமோஷனை தற்போது படக்குழுவினர் துவக்கி முழு வீச்சில் நடத்தி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தினை பிரம்மாண்டமான வகையில் இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.

பிரமோஷனல் டூர்
மணிரத்னத்தில் கனவு பிராஜெக்டான பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங்கை வெறும் 150 நாட்களில் முடித்துள்ளார் மணிரத்னம். அவரது இந்த முயற்சிக்கு சிறப்பாக படக்குழுவினர் கைக்கொடுத்துள்ளனர். தற்போது படத்தின் ரிலீசுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அவர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து வருகிறது.

கேரக்டர்களாக மாறிய நடிகர்கள்
படத்தில் தாங்கள் ஏற்று நடித்த கேரக்டர்களின் பெயரில் தங்களது ட்விட்டர் பக்கத்தை இவர்கள் தற்போது மாற்றியுள்ளனர். மேலும் படக்குழுவினர் இன்றைய தினம் படத்திற்கான பிரமோஷனல் டூரை சென்னையில் துவங்கியுள்ளனர். பத்திரிகை, டிவி, ரேடியோ என அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

சென்னை -துபாய் டூர்
இந்த டூரில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டணி சென்னையில் துவங்கி, தஞ்சாவூர், கேரளா, பெங்களூரு, டெல்லியை தொடர்ந்து துபாயில் இந்த டூரை நிறைவு செய்யவுள்ளது. படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

வட இந்தியா -வெளிநாடுகளில் ஐஸ்வர்யா ராய் பிரமோஷன்
இந்நிலையில், வட இந்தியா மற்றும் வெளிநாடுளில் நடைபெறும் பிரமோஷன்கள் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை தற்போது விற்றுத் தீர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











