Don't Miss!
- Sports
நியூசிக்கு எதிரான முதல் டி20 போட்டி.. பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்குமா? தொடக்க வீரர்கள் யார்?
- News
என்னாச்சு.. கூகுள் உள்ளிட்ட ஐடி கம்பெனிகள் திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஏன்? காரணம் இதுதான்
- Finance
பாகிஸ்தானின் மோசமான நிதிநிலை.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்..அமைச்சர்களுக்கு சலுகை கட்..!
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அது அருண்மொழி இல்லை.. அருள்மொழி வர்மன்.. பொன்னியின் செல்வன் போஸ்டரிலேயே இவ்ளோ பெரிய ஓட்டையா?
சென்னை: சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் இந்த வாரம் முழுவதும் வெளியான நிலையில், பொன்னியின் செல்வனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் போஸ்டர் எங்கேப்பா என ரசிகர்கள் கேட்ட நிலையில், தற்போது லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக ஜெயம் ரவியின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது.
Recommended Video
போர்க் களத்தில் எதிரிகளை பந்தாடும் விதமாக கையில் ஈட்டி உடன் ஜெயம் ரவி இருக்கும் போஸ்டரை தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஆனால், ஜெயம் ரவியின் கதாபாத்திர பெயரில் படக்குழு தவறு செய்து விட்டதாக பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
விஜயகாந்தை பற்றி விசாரித்த நடிகர் அஜித்... துணை நடிகர் வியந்து பாராட்டிய சம்பவம்

இது பொன்னியின் செல்வன் வாரம்
சோழன் வருகிறான் என இந்த வாரத்தின் துவக்கத்தில் அறிவிப்பு வெளியான நிலையில், தினமும் ஒவ்வொரு போஸ்டர்களாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இத்தனை பெரிய கதையை படமாக எடுக்கும் முயற்சியை எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலர் முயற்சித்தும் முடியாத நிலையில், தமிழ் சினிமாவின் பெருமையை சொல்லும் படமாக இதை உருவாக்க மணிரத்னம் எடுத்த முயற்சிகளுக்கு ரசிகர்கள் வரவேற்பை கொடுக்க வேண்டும் என்கிற கருத்தும் சமூக வலைதளத்தில் வலுத்து வருகிறது.

ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி
சோழ சாம்ராஜ்யத்தையே தமிழ் நாட்டில் நிலை நாட்டி மிகப்பெரிய ஆட்சியை செய்து உலகமே இன்று வரையிலும் வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் கதை தான் இந்த பொன்னியின் செல்வன். அருள் மொழி வர்மன், பொன்னியின் செல்வன், ராஜ ராஜ சோழன் என ஏகப்பட்ட பெயர்களால் இந்த கதையில் அவர் அறியப்படுவார். இந்நிலையில், அவரது அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஈட்டியுடன் ஜெயம் ரவி
ஆதித்த கரிகாலனாக விக்ரம் குதிரையிலும், வத்தியத்தேவனாக கார்த்தி குதிரையிலும் வந்த நிலையில், அருள்மொழி வர்மனான ஜெயம் ரவி யானையில் அசத்தலாக வருவார் என பார்த்த ரசிகர்களுக்கு, கையில் ஈட்டியுடன் போர்க்களத்தில் இருக்கும் காட்சியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், இன்று மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகும் என்கிற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

அது அருண்மொழி இல்லை
அருள்மொழி வர்மன் என்கிற பெயருக்கு பதிலாக அருண்மொழியாக ஜெயம் ரவி நடிக்கிறார் என தற்போது வெளியாகி உள்ள ஆங்கில போஸ்டரை பார்த்த பொன்னியின் செல்வன் வாசகர்கள் அது அருண்மொழி அல்ல அருள்மொழி என திருத்தம் சொல்லி உள்ளனர். சமீபத்தில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன் டைட்டில் போஸ்டரிலேயே எழுத்துப் பிழை இருந்தது குறிப்பிடத்தக்கது. டிசைனர்கள் ரெடி செய்யும் போஸ்டரை இயக்குநர் பார்த்து சரி செய்து ஓகே சொன்ன பின்னர் வெளியிட மாட்டார்களா? எப்படி இவ்வளவு பெரிய ஓட்டை இந்த முக்கியமான போஸ்டரில் வந்தது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆங்கிலத்தின் அருண்மொழி என்று தேடினாலும், அருள்மொழி வர்மன் படங்கள் வருவதால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.